Cinema

சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகம்.. பலநாள் ரகசியத்தை உடைத்த டி இமான்..  இதுதான் காரணம்
Cinema

சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகம்.. பலநாள் ரகசியத்தை உடைத்த டி இமான்.. இதுதான் காரணம்

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும் அயலான் படத்தின் பொங்கல் ரிலீஸ்க்கும் காத்துக்கொண்டு இருக்கிறார். சிவகார்த்திகேயனின் இந்த அசுர வளர்ச்சியில் ஆரம்பம் முதலே தன் இசை மூலம் பக்கபலமாக இருந்தவர் தான் இசையமைப்பாளர் டி இமான். மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என இந்த படங்கள் எல்லாமே சிவாவின் இந்த வளர்ச்சிக்கு வித்திட்டது. டி இமான் இசையில் வெளிவந்த இந்த படங்களின் பாடல்கள் எல்லாமே பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. சிவகார்த்திகேயனை பாடகராக அறிமுகப்படுத்தியதும் டி இமான் தான். சிவகார்த்திகேயன்னும் டி இமான் அல்லது அனிருத் என இவர்களுடன் மாறி மாறி பணியாற்றுவார். ஆனால் 2019-ல் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் டி இமான் உடன் எந்த ப...
விடாமுயற்சி படப்பிடிப்பில் பறிப்போன உயிர்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்.. சோகத்தில் படக்குழு
Cinema

விடாமுயற்சி படப்பிடிப்பில் பறிப்போன உயிர்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்.. சோகத்தில் படக்குழு

துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்குமார் நடித்துக் கொண்டிருக்கும் படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்க படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் போய் கொண்டிருக்கிறது. நடிகை திரிஷாவும் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு அஜித்குமாருடன் இணைந்து நடிக்கிறார். இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வந்திருக்கிறது. இந்த படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கலை இயக்குனர் மிலன்.. பில்லா, ஏகன், வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், துணிவு என பல அஜித் படங்களிலும் மற்றும் இயக்குனர் சிவாவின் அனைத்து படங்களிலும் பணியாற்றியவர். துணிவு படத்திற்கு பிறகு சூரியாவின் கங்குவா மற்றும் அஜித்தின் விடாமுயற்சி என இரண்டு பெரிய படங்களில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அஜர்பைஜானில...
LCU இல்லப்பா.. உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்
Cinema

LCU இல்லப்பா.. உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்

விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வருகின்ற அக்டோபர் 19 வெளியாகவிருக்கும் படம் தான் லியோ. இந்த படம் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணையும் இரண்டாவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. லியோ படத்தை ப்ரோமோட் பண்ணும் விதமாக லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த பேட்டிகள் தான் இப்பொழுது சமூக வலைதளங்கள் முழுக்க வைரல். லியோ படம் LCU என்றழைக்கப்படும் Lokesh Cinematic Universe-ல் வருமா வராதா என்ற கேள்வி தான் பல பேட்டிகளில் கேட்கப்பட்டது. லோகேஷ் கனகராஜும் மிக தெளிவாக அந்த கேள்விக்கு மட்டும் எந்த பதிலும் சொல்லாமல் படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள் என்று கூறி வந்தார். லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் அடுத்து ரஜினிகாந்த்தின் தலைவர்171 இயக்கவுள்ளார் என்பது நம்மில் பலரும் அறிந்ததே. சன் பிக்சர்ஸ் தயாரிக்...
லியோவிற்கு 4 மணி காட்சி இல்லையா? சற்றுமுன் வெளிவந்த அதிரவைக்கும் அறிக்கை
Cinema

லியோவிற்கு 4 மணி காட்சி இல்லையா? சற்றுமுன் வெளிவந்த அதிரவைக்கும் அறிக்கை

லியோ படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. விஜய் ரசிகர்களும் போட்டிப்போட்டு கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர். கண்டிப்பாக லியோ திரைப்படம் முந்தைய படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். தமிழக அரசும் லியோ படத்திற்கு சிறப்புக்காட்சிக்கான அனுமதியை கொடுத்த நிலையில்.. தமிழகத்திலுள்ள திரையரங்குகள் அக்டோபர் 19 முதல் 24 வரையுள்ள இந்த 6 நாட்கள் மட்டும் கூடுதலாக ஒரு காட்சியை சேர்த்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 5 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி. இந்த செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் லியோ படத்திற்கு அதிகாலை 4 அல்லது 7 மணி காட்சிகள் இருக்குமா என்று கேள்வி எழுப்பி வந்தனர். கேரளா மற்றும் வெளிநாடுகளில் அதிகாலை 4 மணி காட்சியுள்ளதால் தமிழகத்திலும் இருக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்தன...
லியோவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள்
Cinema

லியோவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள்

லியோ வருகின்ற அக்டோபர் 19 வெளியாவதை தொடர்ந்து படத்திற்கான ப்ரோமோஷன்கள் முழுவீச்சில் போய்க்கொண்டு இருக்கிறது. இன்று அன்பெனும் என்ற மூன்றாவது பாடல் வெளியாக உள்ளது. https://twitter.com/7screenstudio/status/1711724621328712142?t=eed2JxW6kjMvvCSmb-p3aw&s=19 லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியொன்றில் இந்த பாடலை பற்றி மிகவும் வியந்துப் பேசியிருந்தார். என்னுடைய முந்தைய படங்களில் இப்படியொரு பாடல் இருந்ததே இல்லை. இது எனக்கே புது அனுபவமாக இருந்தது. படத்தில் சில ரொமான்ஸ் காட்சிகளும் என்னால் முடிந்த வரை முயற்சி செய்து எடுத்துள்ளேன். அவை நன்றாகவும் வந்துள்ளது என்று கூறியிருந்தார். ரசிகர்களும் லோகேஷ் படத்தில் மெலோடி பாடலா என்று இந்த பாடலுக்கு பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டுயிருக்கின்றனர். இது ஒருபுறமிருக்க லியோ டிரெய்லரில் ஏற்பட்ட மாற்றம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளத...
லியோ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்.. சென்சாரால் கடுப்பான ரசிகர்கள்
Cinema

லியோ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்.. சென்சாரால் கடுப்பான ரசிகர்கள்

லியோ வருகின்ற அக்டோபர் 19 வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. சென்சார் ரிப்போர்ட்டில் பல சஸ்பென்ஸ்கள் உடைந்துவிட்டது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். லியோ படத்திற்கு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்ட விஷயம் எல்லோரும் அறிந்ததே. அதை உறுதிப்படுத்தும் விதமாக தான் டிரெய்லர் இருந்தது. ரத்தம், வன்முறை முதற்கொண்டு கெட்ட வார்த்தை வரை படம் இப்படி தான் இருக்குமென்று தெளிவாக லோகேஷ் கனகராஜ் காட்டிவிட்டார். இந்நிலையில் படத்தின் சென்சார் ரிப்போர்ட் மூலம் எந்தெந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்ததுள்ளது. லியோ படத்தின் நீளம் 2 மணிநேரம் 44 நிமிடங்கள் 27 நொடிகள். படத்திலிருந்து 43 நொடிகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. 18 நொடிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 1.படத்தில் காட்டப்படும் அனைத்து இடங்களின் பெயரையும் தமிழில் குறிப்பிட்டுள்ள...
லோகேஷ் இப்படி உளறிட்டீங்களே.. லியோ சஸ்பென்ஸை உடைத்த இயக்குனர்
Cinema

லோகேஷ் இப்படி உளறிட்டீங்களே.. லியோ சஸ்பென்ஸை உடைத்த இயக்குனர்

லியோ படம் பற்றி தான் மொத்த கோலிவுட் வட்டாரமே பேசிக்கொண்டு இருக்கிறது. அந்த அளவுக்கு மிகவும் எதிர்ப்பார்ப்பை கொண்டுள்ள படமாக லியோ அமைந்துள்ளது. இதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணையும் இரண்டாவது படம் மற்றும் அவரின் முந்தைய படமான விக்ரம் அடைந்த இமாலய வெற்றி. லியோ படம் சுற்றி பல்வேறு கேள்விகள் ரசிகர்களிடம் இருந்தாலும்.. முக்கியமாக பெரிதும் கேட்கப்படுவது லியோ LCU-வில் வருமா வராதா என்ற கேள்வி தான். Lokesh Cinematic Universe தான் சுருக்கமாக LCU என்று அழைக்கப்படுகிறது. இது ரசிகர்களே வைத்த பெயர் தான். மாநகரம் படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கிய படம் தான் கைதி. இந்த கைதி படத்தை கமல்ஹாசனின் விக்ரம் படத்துடன் இணைத்து இருப்பார். இவ்வாறு இருவேறு படங்கள் ஒன்றாக இணைவதை யுனிவர்ஸ் என்று சினிமாமொழியில் அழைப்பார்கள். இந்த யுனிவர்ஸில் வரும் படங்கள் எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புக் கொண்டதாகவே ...
LEO விஜய் கெட்ட வார்த்தை ஏன் பேசணும்? உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்
Cinema

LEO விஜய் கெட்ட வார்த்தை ஏன் பேசணும்? உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்

லியோ படம் அக்டோபர் 19 வெளியாவதை முன்னிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அதில் லியோ படத்தை பற்றிய நிறைய கேள்விகளுக்கு பதிலை கூறி எதிர்ப்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளார். இதுவரை லியோ படம் சந்திக்காத சர்ச்சைகளே இல்லை என்று தான் சொல்லவேண்டும். சிகரெட் பிடித்தது முதல் இசை வெளியீட்டு விழா ரத்து ஆனது வரை பல பிரச்சனைகளை லியோ படம் எதிர்கொண்டது. இதுக்கு ஒரு முடிவே இல்லையா என்பது போல் லியோ டிரெய்லரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜேஸ்வரி பிரியா, ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலர் விஜய் இவ்வாறு கெட்ட வார்த்தை பேசுவது இளைஞர்களுக்கும், அவரை ரசித்து மகிழும் குழந்தைகளுக்கும் ஒரு தவறான முன்னுதாரணம். விஜய்யை பின்தொடர்பவர்கள் அதிகம் இருக்கும் போது இதையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த காட்சி படத்திலிருந்து நீக்கப்பட வேண்டு...
LEO TRAILER பார்த்துவிட்டு விஜய் சொன்ன ஒற்றை வார்த்தை.. உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர் லலித்
Cinema

LEO TRAILER பார்த்துவிட்டு விஜய் சொன்ன ஒற்றை வார்த்தை.. உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர் லலித்

லியோ டிரெய்லர் தான் இப்போ சமூக வலைதளங்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்துள்ளது. டிரெய்லரை விஜய் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து வைரல் செய்து வருகின்றனர். லியோ டிரெய்லரை கண்டு கோலிவுட் வட்டாரமே ஆடிப்போய் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். திரைத்துறையை சார்ந்த பலரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜை பாராட்டி வருகின்றனர். லியோ முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டை காட்சிகள் நிறைந்த படமா இருக்க போகிறது. கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கப்போகிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. உறுதியாக 1000 கோடி வசூல் செய்யும் முதல் தமிழ்ப்படம் என்ற சாதனையை படைக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். இந்நிலையில் லியோ டிரெய்லரை பார்த்து விட்டு தளபதி விஜய் பேசியதை பற்றி படத்தின் தயாரிப்பாளர் லலித் கூறியுள்ளார். தயாரிப்பாளர் லலித் கூறியது என்னவென்றால் "லியோ டிரெய்லர் எடிட் முடிந்த ச...
LEO TRAILER-ல் இதெல்லாம் கவனித்தீர்களா? லோகேஷின் தரமான சம்பவம்.. DECODING
Cinema

LEO TRAILER-ல் இதெல்லாம் கவனித்தீர்களா? லோகேஷின் தரமான சம்பவம்.. DECODING

தளபதி விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகிவிட்டது. குடும்பம், பகை, தவிப்பு, அழுகை, ரத்தம், கோபம், பழி, வெறி என்று இப்படி எல்லாவற்றையும் கலந்த கலவையாக டிரெய்லர் உள்ளது. டிரெய்லர் பார்க்கும் போதே இது 2005-ல் வெளிவந்த A history of violence என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்பது உறுதியாகிறது. இருந்தாலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மெனக்கெடல் நன்றாகவே தெரிகிறது. டிரெய்லர் முழுக்க அதிரடியான சண்டைக்காட்சிகள் நிரம்பி வழிகிறது. காஷ்மீரில் அமைதியாக குடும்பத்துடன் தலைமறைவாக வாழும் லியோ தாஸ். இவர் இருக்கும் இடத்தை அறிந்து பழித்தீர்க்க வருகிறார்கள் ஆண்டனி தாஸ் மற்றும் ஹரோல்டு தாஸ். இருவரின் நடிப்பும் மிகவும் வில்லத்தனமாக இருக்கிறது. கண்டிப்பாக படத்தில் சஞ்சய் தத்தும், அர்ஜுன்னும் நம்மை மிரட்ட போகிறார்கள். திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர...