லியோ டிரெய்லர் தான் இப்போ சமூக வலைதளங்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்துள்ளது. டிரெய்லரை விஜய் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து வைரல் செய்து வருகின்றனர்.

லியோ டிரெய்லரை கண்டு கோலிவுட் வட்டாரமே ஆடிப்போய் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். திரைத்துறையை சார்ந்த பலரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜை பாராட்டி வருகின்றனர்.
லியோ முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டை காட்சிகள் நிறைந்த படமா இருக்க போகிறது. கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கப்போகிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. உறுதியாக 1000 கோடி வசூல் செய்யும் முதல் தமிழ்ப்படம் என்ற சாதனையை படைக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

இந்நிலையில் லியோ டிரெய்லரை பார்த்து விட்டு தளபதி விஜய் பேசியதை பற்றி படத்தின் தயாரிப்பாளர் லலித் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் லலித் கூறியது என்னவென்றால் “லியோ டிரெய்லர் எடிட் முடிந்த செய்தி தெரிந்த உடனே விஜய் சார் நான் கண்டிப்பாக டிரெய்லரை பார்க்க வேண்டும் என்று சொன்னார்.
இந்த வாரம் திங்கட்கிழமை தான் விஜய் சார் டிரெய்லரை பார்த்தார். முதல் தடவை பார்த்த போதே அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் விஜய் சார் பெருசாக எப்பொழுதும் ரியாக்ட் பண்ணமாட்டார். டிரெய்லர் பார்த்துவிட்டு அவர் சொன்ன ஒரே வார்த்தை “ஓகே“.
லியோ படத்திற்க்காக தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகவும் கடுமையாக உழைத்துள்ளார்கள்” என்று பேசியுள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் லலித் லியோ படத்திற்கு அடுத்தக்கட்டமாக என்ன ப்ரோமோஷன் திட்டங்கள் வைத்துள்ளார் என்பதை பற்றியும் கூறியிருக்கிறார்.
அதனை அறிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்
