லியோ படம் பற்றி தான் மொத்த கோலிவுட் வட்டாரமே பேசிக்கொண்டு இருக்கிறது. அந்த அளவுக்கு மிகவும் எதிர்ப்பார்ப்பை கொண்டுள்ள படமாக லியோ அமைந்துள்ளது. இதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணையும் இரண்டாவது படம் மற்றும் அவரின் முந்தைய படமான விக்ரம் அடைந்த இமாலய வெற்றி.

லியோ படம் சுற்றி பல்வேறு கேள்விகள் ரசிகர்களிடம் இருந்தாலும்.. முக்கியமாக பெரிதும் கேட்கப்படுவது லியோ LCU-வில் வருமா வராதா என்ற கேள்வி தான்.
Lokesh Cinematic Universe தான் சுருக்கமாக LCU என்று அழைக்கப்படுகிறது. இது ரசிகர்களே வைத்த பெயர் தான். மாநகரம் படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கிய படம் தான் கைதி. இந்த கைதி படத்தை கமல்ஹாசனின் விக்ரம் படத்துடன் இணைத்து இருப்பார். இவ்வாறு இருவேறு படங்கள் ஒன்றாக இணைவதை யுனிவர்ஸ் என்று சினிமாமொழியில் அழைப்பார்கள்.
இந்த யுனிவர்ஸில் வரும் படங்கள் எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புக் கொண்டதாகவே இருக்கும். விக்ரம் படம் போலவே லியோவும் இந்த யுனிவர்ஸில் இடம்பெற வேண்டும் என்பது தான் விஜய் ரசிகர்களின் ஆசை.

லியோ ட்ரெய்லர் மூலம் படம் LCU-வில் வருமா வராதா என்பது தெரியவரும் என்று நினைத்தார்கள். ஆனால் டிரெய்லரில் LCU-க்கான எந்த குறியீடும் இல்லை. அப்போ லியோ LCU-வில் வராதோ என்ற குழப்பம் ஏற்பட்டது. சிலர் சமூக வலைத்தளத்தில் கண்டிப்பாக லியோ LCU தான் என்று சொல்லி வருகிறார்கள்.
லோகேஷ் கனகராஜூம் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி வந்தார். ஆனால் இப்போது பேட்டியொன்றில் LCU பற்றி உளறி வைத்துள்ளார் என்று ரசிகர்கள் கண்டுப்பிடித்து விட்டனர்.

தொகுப்பாளர் லோகேஷிடம் லியோ படத்தில் பணிப்புரிந்தவர்கள் பற்றி கேள்வி கேட்க.. லோகேஷ் பதில் கூறுகையில் “என்னுடைய எல்லா படத்திலும் கலை இயக்குனர் சதீஷ் மற்றும் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் பணிப்புரிந்து இருக்கிறார்கள். லியோ படத்திலும் இவர்கள் பணிப்புரிகிறார்கள்.
காரணம் இவர்கள் என் நண்பர்கள் என்பதால் வேலை வாங்குவது எனக்கு கொஞ்சம் சுலபம். மேலும் நாங்கள் முந்தைய படத்தில் எதையெல்லாம் முயற்சி செய்யவில்லையோ அதை இதில் செய்துப் பாக்கலாம். ஆனால் இந்த படம் யுனிவர்ஸில் வருவதால் எல்லாமே புதுசாக பண்ண முடியாது” என்று லியோ LCU-வில் உள்ளது என்று பேச்சுவாக்கில் உளறிவிட்டார் லோகேஷ்.
லோகேஷ் படத்திலுள்ள ஒற்றுமைகளை தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்
