சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும் அயலான் படத்தின் பொங்கல் ரிலீஸ்க்கும் காத்துக்கொண்டு இருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் இந்த அசுர வளர்ச்சியில் ஆரம்பம் முதலே தன் இசை மூலம் பக்கபலமாக இருந்தவர் தான் இசையமைப்பாளர் டி இமான்.
மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என இந்த படங்கள் எல்லாமே சிவாவின் இந்த வளர்ச்சிக்கு வித்திட்டது. டி இமான் இசையில் வெளிவந்த இந்த படங்களின் பாடல்கள் எல்லாமே பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. சிவகார்த்திகேயனை பாடகராக அறிமுகப்படுத்தியதும் டி இமான் தான்.
சிவகார்த்திகேயன்னும் டி இமான் அல்லது அனிருத் என இவர்களுடன் மாறி மாறி பணியாற்றுவார். ஆனால் 2019-ல் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் டி இமான் உடன் எந்த படமும் பண்ணவில்லை.

இந்நிலையில் டி இமான் சமீபத்திய பேட்டியில் முதல்முறையாக அதற்கு என்ன காரணம் என்பதை உடைத்துள்ளார். அதில் அவர் கூறியது “இந்த ஜென்மத்தில் நான் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து படம் பண்ணமாட்டேன்.. அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்து அப்போதும் நான் இசையமைப்பாளராகவும் அவர் ஹீரோவாகவும் இருந்தால் வாய்ப்பு உண்டு.
எனக்கு அப்படி ஒரு துரோகத்தை அவர் செய்துவிட்டார். அதையெல்லாம் வெளியே சொன்னால் என் பிள்ளைகள் தான் பாதிக்கப்படுவார்கள். அவர் எனக்கு செய்த துரோகம் மிக தாமதமாக தான் தெரிய வந்தது. ஆனால் அவர் அதையெல்லாம் மறைத்து என்னிடம் பழகி வந்தார்.
அவர் எனக்கு மிகவும் பழக்கம். அவர் குடும்பத்திற்கும் நான் நெருக்கம் தான். அப்படி இருந்தும் அவர் அந்த ஒரு துரோகத்தை செய்தார். தப்பு செய்யாத மனிதர்களே இல்லை என்னையும் உட்பட.. அவர் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் கட்டாயம் மன்னித்து விடுவேன். ஆனால் அவர் செய்த துரோகத்தை மறக்கமாட்டேன்.
காசுக்காக இசையமைப்பவன் அல்ல நான்.. நண்பர்கள் என்ற எண்ணத்தில் தான் நான் பணிபுரிவேன். சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை மனதில் வைத்துக்கொண்டு எப்படி என்னால் அதை மறந்து பணியாற்ற முடியும்? பலர் என்னிடம் ஏன் நீங்களும் சிவகார்த்திகேயன்னும் இணைந்து படம் பண்ணுவதில்லை என்று கேட்டு கொண்டே இருக்கிறார்கள்.
அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளியாக இப்போது இந்த பேட்டி மூலம் பதில் கூறிவிட்டேன்” என டி இமான் சிவகார்த்திகேயன் உடன் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ஆனால் எந்த இடத்திலும் டி இமான் சிவகார்த்திகேயன் என்ன துரோகம் செய்தார் என்பதை சொல்லவில்லை.
இது சமூக வலைத்தளத்தில் பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. பலரும் பலவிதமான காரணங்களை கூறி வருகின்றனர். சிவகார்த்திகேயன் இதற்கு எதும் பதிலளிப்பாரா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
