லியோ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்.. சென்சாரால் கடுப்பான ரசிகர்கள்

லியோ வருகின்ற அக்டோபர் 19 வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. சென்சார் ரிப்போர்ட்டில் பல சஸ்பென்ஸ்கள் உடைந்துவிட்டது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

லியோ படத்திற்கு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்ட விஷயம் எல்லோரும் அறிந்ததே. அதை உறுதிப்படுத்தும் விதமாக தான் டிரெய்லர் இருந்தது. ரத்தம், வன்முறை முதற்கொண்டு கெட்ட வார்த்தை வரை படம் இப்படி தான் இருக்குமென்று தெளிவாக லோகேஷ் கனகராஜ் காட்டிவிட்டார்.

இந்நிலையில் படத்தின் சென்சார் ரிப்போர்ட் மூலம் எந்தெந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்ததுள்ளது.

லியோ படத்தின் நீளம் 2 மணிநேரம் 44 நிமிடங்கள் 27 நொடிகள். படத்திலிருந்து 43 நொடிகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. 18 நொடிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

1.படத்தில் காட்டப்படும் அனைத்து இடங்களின் பெயரையும் தமிழில் குறிப்பிட்டுள்ளார்கள்.

2. புகைப்பிடிக்கும் எல்லா காட்சிகளிலும் புகையிலை எச்சரிக்கை வாசகம் சேர்த்துள்ளார்கள்.

3. படத்தின் தொடக்கத்தில் புகையிலை மற்றும் போதைப் பழக்கம் தொடர்பான எச்சரிக்கை வாசகம் சேர்த்துள்ளார்கள். மேலும் படத்தில் எங்கே போதை பொருட்கள் பயன்படுத்தினாலும் எச்சரிக்கை வாசகம் தமிழில் இடம்பெறும்.

4. படத்திலுள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளின் ஒலியும் நீக்கப்பட்டுள்ளது.

5. சண்முகம் என்பவரால் கலெக்டர் கொல்லப்படும் காட்சியின் பார்வைநேரம் குறைக்கப்பட்டுள்ளது.

6. அடித்து பல் தெறித்து வெளியே வரக்கூடிய காட்சி நீக்கப்பட்டுள்ளது. மேலும் பேப்பர் ஹோல்டர் வைத்து இடம்பெற்ற சண்டைக்காட்சியும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

7. ரத்தம் தெறிப்பது போன்ற காட்சி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. காதை அறுக்கும் காட்சி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

8. சிகரெட்டின் பெயரில் இருந்து ‘Classic‘ என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

9. ‘ உள்ள போனா சீக்கிரம் விட்டுருவாங்க‘ என்ற வசனத்தின் ஒலி நீக்கப்பட்டுள்ளது.

10. ஆண்டனி தாஸின் அடிப்பட்ட முகம், ரத்தம் மற்றும் அவரை வீலில் இடிப்பது போன்ற காட்சிகளின் நேரம் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டனி தாஸ் வாயிலிருந்து ரத்தம் தெறிப்பது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

11. சண்டைக்காட்சிகளில் தெறிக்கப்படும் ரத்தம் மற்றும் தொடர்ச்சியாக குத்தப்படுவது போன்ற காட்சிகளின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது.

12. வெடிப்பில் கணுக்கால் மட்டும் சிதறிப் பறக்கும் காட்சி நீக்கப்பட்டுள்ளது.

13. மற்ற படத்தின் பாடல் பயன்படுத்தப்பட்டது நீக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி இருந்தால் அந்த பாடலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்படி லியோ படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டும் மாற்றியமைக்கப்படும் உள்ளது.

இந்த சென்சார் ரிப்போர்ட்டில் காட்சிகளின் நேரம் குறிப்பிட்டபட்டுள்ளது. அதன் மூலம் எந்தெந்த காட்சிகள் எப்போது வரும் என்பது தெளிவாக தெரிகிறது. இப்படி ஸ்பாய்லர்களை சொல்லி விட்டீர்களே என ரசிகர்கள் சிலர் புலம்பி வருகின்றனர்.

லியோ படத்தின் சென்சார் பற்றிய வீடியோ கீழே உள்ள லிங்கில்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: