Cinema

விவாகரத்து.. திரௌபதி நடிகை ஷீலாவின் அதிர்ச்சி பதிவு
Cinema

விவாகரத்து.. திரௌபதி நடிகை ஷீலாவின் அதிர்ச்சி பதிவு

திரௌபதி படம் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை ஷீலா ராஜ்குமார். டூலெட், மண்டேலா, நம்ம வீட்டு பிள்ளை, பிச்சைக்காரன் 2 போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இப்படி வளர்ந்து வரும் நடிகை ஷீலா தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். அழகிய தமிழ் மகள் என்ற ஜீ தமிழ் சீரியலில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பிறகு பட வாய்ப்புகள் வர அதை சரியாக பயன்படுத்தி கொண்டார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒரு குறும்படத்தில் நடிக்க ஷீலாக்கு வாய்ப்பு வந்தது. அப்படி தான் உதவி இயக்குனர் தம்பி சோழன் உடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது. காதல் என்பதால் இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்க.. வீட்டை எதிர்த்து கொண்டு நடுக்கடலில் இவர்களின் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் மிகவும் காதலித்து தான் கல்யாணம் செய்து கொண்டார்கள். https://...
காதலன் பப்லு ப்ரித்விராஜை பிரிந்த ஷீத்தல்? வெளிவரும் உண்மைகள்
Cinema

காதலன் பப்லு ப்ரித்விராஜை பிரிந்த ஷீத்தல்? வெளிவரும் உண்மைகள்

நடிகர் பப்லு ப்ரித்விராஜ் கடந்த வருடம் ஷீத்தல் என்கிற 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 56 வயதில் இவருக்கு இரண்டாவது கல்யாணம் அதுவும் 24 வயது பெண் உடன்.. இதெல்லாம் தேவையா என்று பலரும் விமர்சித்து வந்தனர். பதிலுக்கு ப்ரித்விராஜ் பேட்டியில் நாங்கள் இன்னும் திருமணம் செய்யவில்லை. ஆனால் காதலித்து வருவது உண்மை தான். முதல் மனைவி பீனாவுடன் விவாகரத்து ஆகிவிட்டது. ஷீத்தலை எனக்கு 1 வருடமாக தெரியும். நட்பு காதலாக மாறிவிட்டது. எங்களுக்கு வயது பிரச்சினை இல்லை. ஏன் இந்த வயதில் காதல் வரக்கூடாதா? இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று ஆதங்கப்பட்டு பேசியிருந்தார். மேலும் வருகின்ற டிசம்பர் அல்லது அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் எங்கள் திருமணம் நடக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஓர் அதிர்ச்சிகரமான செய்தி சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீயாய் பரவி வர...
பருத்திவீரன் சர்ச்சை: “எகத்தாளப் பேச்சு” ஞானவேல்ராஜாவை கிழித்தெடுத்த சமுத்திரக்கனி
Cinema

பருத்திவீரன் சர்ச்சை: “எகத்தாளப் பேச்சு” ஞானவேல்ராஜாவை கிழித்தெடுத்த சமுத்திரக்கனி

பருத்திவீரன் படம் தொடர்பான பிரச்சினை 16 ஆண்டுகளாகியும் தீர்வு இல்லாமல் கன்னித்தீவு கதை போல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கார்த்தி 25 நிகழ்ச்சிக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் அமீர் ஏன் வரவில்லை என்று தொடங்கிய சர்ச்சை மூலம் பருத்திவீரன் படப் பிரச்சினை மீண்டும் வெளிச்சதுக்கு வந்துள்ளது. இயக்குனர் அமீரும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். யார் சொல்வது தான் உண்மை என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழ.. அமீர்க்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், பாரதிராஜா, கரு பழனியப்பன் என பலரும் குரல் கொடுத்தனர். அதன் விளைவாக ஞானவேல்ராஜாவும் என் வார்த்தைகள் அமீர் அண்ணாவை காயப்படுத்தி இருந்தால் அதற்கு வருந்துகிறேன் என்று அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கைக்கு சசிகுமார் இவரே திட்டமிட்டு அவமானப்படுத்திட்டு இவரே வருத்தம் தெரிவிப்பாரா? என்று கேள்வி எழுப்பினார். ...
விஜயகாந்த்தின் தற்போதைய உடல்நிலை : மனைவி பிரேமலதா வெளியிட்ட வீடியோ
Cinema

விஜயகாந்த்தின் தற்போதைய உடல்நிலை : மனைவி பிரேமலதா வெளியிட்ட வீடியோ

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சீராக இல்லை.. நுரையீரல் சிகிச்சை உதவி தேவைப்படுகிறது என மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த நம்பவர் 18 ஆம் தேதி விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என எதிர்ப்பார்த்த நிலையில் உடல்நிலை சீராக இல்லாத காரணத்தால் சிகிச்சை தொடந்துக் கொண்டே இருக்கிறது. மருத்துவமனையும் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால்.. நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. விரைவில் பூரண நலம் பெறுவார் என நம்புகிறோம். 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவை என்று அறிக்கை வெளியிட்டனர். இந்த அறிக்கை மக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மனை...
பருத்திவீரன் சர்ச்சை : “அமீர் அண்ணா..” மனம்வருந்திய ஞானவேல்ராஜா
Cinema

பருத்திவீரன் சர்ச்சை : “அமீர் அண்ணா..” மனம்வருந்திய ஞானவேல்ராஜா

பருத்திவீரன் படத்தால் இயக்குனர் அமீர்க்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாக்கும் இடையே கடுமையான பிரச்சினை போய் கொண்டிருக்கிறது. இருவருமே ஒருவர் மேல் ஒருவர் பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். ஆனால் ஞானவேல்ராஜா இந்த பிரச்சினை குறித்து சமீபத்திய பேட்டியில் அமீரை பற்றி மிகவும் மோசமாக பேசியிருந்தார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற சிறந்த படங்களை இயக்கியவர் அமீர். அப்படிப்பட்ட ஒரு கலைஞனை இப்படி தரம்தாழ்ந்து விமர்சிப்பது கண்டிக்கதக்கது என சமூக வலைத்தளத்தில் பேசி வந்தனர். அமீர்க்காக முதல் ஆளாக நடிகரும் இயக்குனருமான சசிகுமார் ஆதரவாக குரல் கொடுத்தார். இது அப்படியே பூதாகரமாக வெடிக்க.. சசிகுமாரை தொடர்ந்து சமுத்திரக்கனி, பொன்வண்ணன், கரு பழனியப்பன், பாரதிராஜா என பலரும் ஞானவேல்ராஜாவை கண்டிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டு அமீர்க்கு ஆதரவாக பேசி வ...
திரிஷா என்னை மன்னித்துவிடு.. நடிகர் மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு
Cinema

திரிஷா என்னை மன்னித்துவிடு.. நடிகர் மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு

மன்சூர் அலிகான் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் "லியோ படத்தில் எனக்கும் திரிஷாவுக்கும் படுக்கை அறை காட்சி இல்லை.. இப்போலாம் கற்பழிக்க விடமாட்றாங்க" என்று மிகவும் அநாகரிகமாக பேசியிருந்தார். இதற்கு திரிஷா மட்டுமில்லாமல் திரைத்துறையை சார்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்காக மன்சூர் அலிகான் நேற்று (நவம்பர் 23) காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் " நான் திரிஷாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை.. ஒரு நடிகையாக அவங்கள பெரிதும் மதிக்கிறேன்" என்று கூறியிருந்தார். இந்நிலையில் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு நடிகை திரிஷாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பது "எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு!இல்லறமாம் நல்லறத்தில்...
Lal Salaam Teaser : மொய்தீன் பாய் ஆக ரஜினி : மாஸ் வசனங்களுடன் வெளியான லால் சலாம் டீஸர்
Cinema

Lal Salaam Teaser : மொய்தீன் பாய் ஆக ரஜினி : மாஸ் வசனங்களுடன் வெளியான லால் சலாம் டீஸர்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணி நடிகர்களாக நடித்துள்ள லால் சலாம் படத்தின் டீஸர் தீபாவளி ஸ்பெஷலாக இன்று வெளியானது. மதம் மற்றும் விளையாட்டை மையப்படுத்தி 1 நிமிடம் 39 வினாடிகள் அளவு கொண்ட இந்த டீசர், இந்தியா-பாக்கிஸ்தான் மேட்சை டிவில பாத்துருப்பீங்க ரேடியோல கேட்டு இருப்பீங்க… நேர்ல பாத்துருக்கீங்களா என்று உள்ளூர் ஆட்டத்தை பில்ட் அப் செய்து டீஸர் ஆரம்பம் ஆகிறது. "நடக்குறது வெறும் போட்டியில்ல போர்" என்று இரண்டு மதத்தினருக்கும் ஏற்படும் பிரச்சனைகள்… அதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன என்பதை போட்டுடைக்கும் படமாக லால் சலாம் படம் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்காக மொய்தீன் பாய் ஆக ரஜினி களமிறங்குகிறார்.. டீசரில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் ரஜினி ரசிகர்களுக்கு மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது....
அரைகுறை ஆடையில் ராஷ்மிகா? வைரலாகும் லிஃப்ட் வீடியோ..வெளிவந்த உண்மை
Cinema

அரைகுறை ஆடையில் ராஷ்மிகா? வைரலாகும் லிஃப்ட் வீடியோ..வெளிவந்த உண்மை

கன்னட படங்களில் நடித்து பிரபலமாகி தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிப் படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் இவர் நடித்து கடைசியாக வெளிவந்த வாரிசு மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்படி முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவை கலங்கப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ பரவி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் உள்ள பெண் அப்படியே ராஷ்மிகா போலவே உள்ளார். லிஃப்ட்டில் உள்ள வரும் அந்த பெண்ணின் உடை சற்று ஆபாசமாக உள்ளது. இதை பார்த்த பலரும் ராஷ்மிகாவிற்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி டிரஸ் பண்ணி இருக்காங்க? என்று பேசி வருகிறார்கள். https://twitter.com/AbhishekSay/status/1721088692675072009?t=OnJSwCWIWncZIf3hroU5FA&s=19 ஆனால் அந்த வீடியோ ஒரு போலியானது என்று தெரிய வந்துள்ளது. சாரா பட்டேல் என்கிற இன்ஸ்டாகிராம் மாடலின் வீடியோவை யாரோ ஒருவர் D...
ஜெயிலர் வசூலை முறியடித்த லியோ..எத்தனை கோடி தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Cinema

ஜெயிலர் வசூலை முறியடித்த லியோ..எத்தனை கோடி தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லியோ திரைப்படம் பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. என்னதான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அவைகள் எதுவுமே படத்தை பெரியளவில் பாதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு கூட்டம் கூட்டமாக சென்று லியோவை கொண்டாடி வருகின்றனர். லியோ படம் வெளியாகும் முன்பே தளபதி விஜய்யின் இந்த படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்குமா என்ற கேள்வி நிலவி வந்தது. ஜெயிலர் 525 கோடிக்கு மேல் வசூலித்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ 12 நாளில் உலகளவில் லியோ எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதன்படி லியோ 540 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. https://twitter.com/7screenstudio/status/1719313952038113478?t=ELHfs2Oko_...
லியோ LCU-ஆ? உதயநிதி பதிவுக்கு லோகேஷின் பதில்
Cinema

லியோ LCU-ஆ? உதயநிதி பதிவுக்கு லோகேஷின் பதில்

லியோ படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். பல தியேட்டர்களில் முதல்நாள் காட்சிகளின் டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்து விட்டன. லியோ படம் பல வசூல் சாதனையை படைக்கும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள். லியோ படம் LCU-வில் வருமா? வராதா? என்ற கேள்வி இன்னும் இந்த படத்தை சுற்றி சுற்றி வருகிறது என்று தான் சொல்லவேண்டும். லோகேஷ் கனகராஜும் பல பேட்டிகளில் LCU பற்றிய கேள்விக்கு அக்டோபர் 19 படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். ஆனால் ரசிகர்கள் பலருக்கும் லியோ LCU-வில் வரவேண்டும் என்பதே விருப்பம். அப்படி வந்தால் கண்டிப்பாக படம் பெரிய அளவில் பேசப்படும். உறுதியாக 1000 கோடி வசூலை எடுக்கும் என்று ரசிகர்கள் பேசி வருவதை காண முடிகிறது. இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லியோ படத்தை பார...