லியோ படம் அக்டோபர் 19 வெளியாவதை முன்னிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அதில் லியோ படத்தை பற்றிய நிறைய கேள்விகளுக்கு பதிலை கூறி எதிர்ப்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளார்.

இதுவரை லியோ படம் சந்திக்காத சர்ச்சைகளே இல்லை என்று தான் சொல்லவேண்டும். சிகரெட் பிடித்தது முதல் இசை வெளியீட்டு விழா ரத்து ஆனது வரை பல பிரச்சனைகளை லியோ படம் எதிர்கொண்டது. இதுக்கு ஒரு முடிவே இல்லையா என்பது போல் லியோ டிரெய்லரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேஸ்வரி பிரியா, ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலர் விஜய் இவ்வாறு கெட்ட வார்த்தை பேசுவது இளைஞர்களுக்கும், அவரை ரசித்து மகிழும் குழந்தைகளுக்கும் ஒரு தவறான முன்னுதாரணம். விஜய்யை பின்தொடர்பவர்கள் அதிகம் இருக்கும் போது இதையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த காட்சி படத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று பேசி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வசனம் பற்றி லோகேஷ் கனகராஜ் பதில் அளித்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால் “நாம் அதிதகோபத்தில் தெரியாமல் கெட்ட வார்த்தை பேசுவது போல் தான் இதுவும். படத்தில் பார்த்திபன் என்ற கதாபாத்திரம் தான் அப்படி பேசுகிறதே தவிர விஜய் அண்ணா பேசவில்லை.
அப்படி உங்களுக்கு திட்ட வேண்டும் என்றால் என்னை திட்டுங்கள். அவரை விட்டுவிடுங்கள். நான் தான் இப்படி ஒரு காட்சி இடம்பெற வேண்டும் என்று கூறினேன். உடனே விஜய் அண்ணாவும் இது நான் பேசினால் சரியாக இருக்குமா என்று கேட்டார். நான் தான் இது படத்திற்கு கட்டாயம் தேவை என்று சொல்லி பேச வைத்தேன்.
இந்த காட்சி தியேட்டரில் வரும் போது பீப் சவுண்ட் வைத்து தான் வரும். யூடூபில் சென்சார் இல்லை என்பதால் அப்படியே வைத்துவிட்டோம்” என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும் லியோ LCU-வில் வருமா வராதா.. இந்த படம் A History Of Violence என்ற ஆங்கில படத்தின் தழுவலா போன்ற கேள்விகளுக்கு அக்டோபர் 19 படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.
லியோ படத்தை பற்றி லோகேஷ் கனகராஜ் கொடுத்த பேட்டிகளின் சுருக்கம் கீழே உள்ள லிங்கில்
