தளபதி விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகிவிட்டது. குடும்பம், பகை, தவிப்பு, அழுகை, ரத்தம், கோபம், பழி, வெறி என்று இப்படி எல்லாவற்றையும் கலந்த கலவையாக டிரெய்லர் உள்ளது.

டிரெய்லர் பார்க்கும் போதே இது 2005-ல் வெளிவந்த A history of violence என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்பது உறுதியாகிறது. இருந்தாலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மெனக்கெடல் நன்றாகவே தெரிகிறது. டிரெய்லர் முழுக்க அதிரடியான சண்டைக்காட்சிகள் நிரம்பி வழிகிறது.

காஷ்மீரில் அமைதியாக குடும்பத்துடன் தலைமறைவாக வாழும் லியோ தாஸ். இவர் இருக்கும் இடத்தை அறிந்து பழித்தீர்க்க வருகிறார்கள் ஆண்டனி தாஸ் மற்றும் ஹரோல்டு தாஸ். இருவரின் நடிப்பும் மிகவும் வில்லத்தனமாக இருக்கிறது. கண்டிப்பாக படத்தில் சஞ்சய் தத்தும், அர்ஜுன்னும் நம்மை மிரட்ட போகிறார்கள்.

திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த் போன்ற நடிகர்கள் லியோ படத்தில் குறைந்த காட்சிகளில் மட்டுமே வருவார்கள் என்று டிரெய்லர் பார்க்கும்போது தோன்றுகிறது. படத்தில் அதிக அளவுக்கு தளபதி விஜய், சஞ்சய் தத், அர்ஜுன் என இந்த மூன்று பேரை சுற்றியே கதை இருக்கும் என்பது டிரெய்லர் மூலம் தெரிகிறது.

பார்த்தி என்ற பெயரில் தலைமறைவாக நிகழ்க்காலத்திலும்.. லியோ தாஸ் என்ற பெயரில் கடந்த காலத்தில் கேங்ஸ்டர் போலவும் இருவேறு விதமான நடிப்பை தளபதி விஜய் தந்து உள்ளார். ரசிகர்களுக்கு லியோ தாஸ் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் விருந்தாக அமைய போகிறது.

லியோ படத்தில் பெரிதும் பேசப்பட்டு வரும் ஹைனாவுடனான சண்டைக்காட்சியும் டிரெய்லரில் இடம்பெற்று எதிர்ப்பார்ப்பை இன்னும் எகிற வைக்கிறது. கழுதைப்புலியின் கிராஃபிக்ஸ் மிகவும் நன்றாகவே உள்ளது.
இந்த ஒரு காட்சி படம் வந்த பிறகு பெரியளவில் பேசப்படும் என்று நம்பப்படுகிறது.

லியோ டிரெய்லரில் எங்கேயும் LCU-க்கான குறியீடு இல்லை.. லியோ Lokesh Cinematic Universe-ல் வருமா வராதா என்ற கேள்வி மீண்டும் தொடர்கிறது. இனிவரும் நாட்களில் தெரிய வருகிறதா என்று பாப்போம்.

யார் இந்த லியோ தாஸ்? ஆண்டனி தாஸ் மற்றும் ஹரோல்டு தாஸ்க்கு லியோ மீது என்ன பகை? லியோ இவர்களை பழி வாங்கினாரா? லியோ குடும்பத்திற்கு என்ன ஆனது? இதுவே மீதி கதையாக இருக்கும்.
இதற்கெல்லாம் பதில் அக்டோபர் 19 கிடைக்கும்.
லியோ டிரெய்லரின் DECODE வீடியோ லிங்க் கீழே
