விடாமுயற்சி படப்பிடிப்பில் பறிப்போன உயிர்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்.. சோகத்தில் படக்குழு

துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்குமார் நடித்துக் கொண்டிருக்கும் படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்க படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் போய் கொண்டிருக்கிறது. நடிகை திரிஷாவும் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு அஜித்குமாருடன் இணைந்து நடிக்கிறார்.

இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வந்திருக்கிறது. இந்த படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கலை இயக்குனர் மிலன்.. பில்லா, ஏகன், வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், துணிவு என பல அஜித் படங்களிலும் மற்றும் இயக்குனர் சிவாவின் அனைத்து படங்களிலும் பணியாற்றியவர். துணிவு படத்திற்கு பிறகு சூரியாவின் கங்குவா மற்றும் அஜித்தின் விடாமுயற்சி என இரண்டு பெரிய படங்களில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

அஜர்பைஜானில் இன்று காலை விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்திற்கு கலை இயக்குனர் மிலன் செல்லும்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்துள்ளது. இவரின் இந்த திடீர் இறப்பால் விடாமுயற்சி படக்குழு அதிர்ந்துப்போய் உள்ளது.

திரைத்துறையை சேர்ந்த பலரும் கலை இயக்குனர் மிலன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் திடீர் இறப்பு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

இதனால் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சிறிதுநாள் நிறுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே கலை இயக்குனர் மிலன் இறந்தது பலரையும் வருத்தத்திற்குள்ளாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: