கன்னட படங்களில் நடித்து பிரபலமாகி தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிப் படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் இவர் நடித்து கடைசியாக வெளிவந்த வாரிசு மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இப்படி முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவை கலங்கப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ பரவி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் உள்ள பெண் அப்படியே ராஷ்மிகா போலவே உள்ளார். லிஃப்ட்டில் உள்ள வரும் அந்த பெண்ணின் உடை சற்று ஆபாசமாக உள்ளது. இதை பார்த்த பலரும் ராஷ்மிகாவிற்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி டிரஸ் பண்ணி இருக்காங்க? என்று பேசி வருகிறார்கள்.
ஆனால் அந்த வீடியோ ஒரு போலியானது என்று தெரிய வந்துள்ளது. சாரா பட்டேல் என்கிற இன்ஸ்டாகிராம் மாடலின் வீடியோவை யாரோ ஒருவர் DEEPFAKE எனப்படும் தொழில்நுட்பம் மூலம் அந்த பெண்ணின் முகத்தில் ராஷ்மிகா முகத்தை மட்டும் மாற்றி எடிட் செய்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் இவ்வீடியோவை பகிர்ந்து வன்மையாக கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் ராஷ்மிகா அந்த வீடியோவை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியது “இதை பற்றி பேசவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. சமூக வலைத்தளங்களில் பரவிட்டு இருக்கிற என்னோட DEEPFAKE வீடியோவை பற்றி நான் பேசியே ஆகனும். இந்த மாதிரி விஷயமெல்லாம் உண்மையா சொல்லனும்னா ரொம்ப பயமா இருக்கு.. எனக்கு மட்டும் இல்ல நம்ம எல்லாருக்குமே தான்.. ஒரு தொழில்நுட்பத்தை தவறா உபயோகப்படுத்தி இப்படி ரொம்ப தப்பு பண்றாங்க..
இன்னைக்கு ஒரு பெண்ணா, ஒரு நடிகையா.. எனக்கு பாதுகாப்பா, ஆதரவா இருக்க என்னோட குடும்பம், நண்பர்கள் மற்றும் நலவிரும்பிகளுக்கு நன்றியை தெரியப்படுத்திக்கிறேன்.. இதே சம்பவம் நான் பள்ளி அல்லது கல்லூரி படிக்கும்போது நடந்து இருந்தா.. எப்படி சமாளித்து இருப்பேன் என்று நினைத்து கூட பாக்கமுடியல ..
இந்த மாதிரி அடையாள திருட்டு மூலமா பல பேர் பாதிக்கப்படுவதற்கு முன்னாடியே, ஒரு குழுவா செயல்பட்டு இதுக்கு ஒரு தீர்வை கொண்டு வரணும்.”
என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தனது போலி வீடியோவிற்கு, அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் x பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது சமூக வலைத்தளங்களில் முக்கிய பங்காக உள்ளது. இதன் மூலம் ஒரு பாடலை பலரின் குரல்களில் கேட்கவும், பல புகைப்படங்களை புத்தாக்கம் செய்யவும் முடிகிறது. ஆனால் இதை தவறாக உபயோகிக்கும் பொழுது இதன் பின்விளைவுகள் மிகவும் அபாயகரமாக உள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI Technology) பலருக்கும் ஆபத்தாக முடியும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே தெரிவியுங்கள்.
DEEPFAKE-ஐ குறித்து ராஷ்மிகா மந்தனா பேசியது கீழே உள்ள லிங்க்கில்..
