பருத்திவீரன் படம் தொடர்பான பிரச்சினை 16 ஆண்டுகளாகியும் தீர்வு இல்லாமல் கன்னித்தீவு கதை போல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கார்த்தி 25 நிகழ்ச்சிக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் அமீர் ஏன் வரவில்லை என்று தொடங்கிய சர்ச்சை மூலம் பருத்திவீரன் படப் பிரச்சினை மீண்டும் வெளிச்சதுக்கு வந்துள்ளது.

இயக்குனர் அமீரும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். யார் சொல்வது தான் உண்மை என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழ.. அமீர்க்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், பாரதிராஜா, கரு பழனியப்பன் என பலரும் குரல் கொடுத்தனர்.
அதன் விளைவாக ஞானவேல்ராஜாவும் என் வார்த்தைகள் அமீர் அண்ணாவை காயப்படுத்தி இருந்தால் அதற்கு வருந்துகிறேன் என்று அறிக்கை வெளியிட்டார்.
இந்த அறிக்கைக்கு சசிகுமார் இவரே திட்டமிட்டு அவமானப்படுத்திட்டு இவரே வருத்தம் தெரிவிப்பாரா? என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் சமுத்திரக்கனி மிகவும் ஆதங்கப்பட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “பிரதர் இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது. நீங்க செய்ய வேண்டியது, எந்த பொதுவெளியில் எகத்தாளமாக உட்கார்ந்துகிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ… அதே பொதுவெளியில் பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்.
நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூவை சமூக வலைத்தளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்
அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு.
அப்புறம் ‘பருத்திவீரன்’ படத்தில் வேலைப் பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம், அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேலை பார்த்தவங்க. ‘நீங்க தான் அம்பானி பேமிலியாச்சே..’ காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி”
என்று ஞானவேல்ராஜாவை எச்சரிக்கும் விதமாக சமுத்திரக்கனி பேசியுள்ளார். விரைவில் இதற்கு ஒரு தீர்வு வரவேண்டும் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பு.
