ஜெயிலர் வசூலை முறியடித்த லியோ..எத்தனை கோடி தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லியோ திரைப்படம் பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. என்னதான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அவைகள் எதுவுமே படத்தை பெரியளவில் பாதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு கூட்டம் கூட்டமாக சென்று லியோவை கொண்டாடி வருகின்றனர்.

லியோ படம் வெளியாகும் முன்பே தளபதி விஜய்யின் இந்த படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்குமா என்ற கேள்வி நிலவி வந்தது. ஜெயிலர் 525 கோடிக்கு மேல் வசூலித்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ 12 நாளில் உலகளவில் லியோ எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதன்படி லியோ 540 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.

ஜெயிலர் படத்தின் வசூலை வெறும் 12 நாட்களில் லியோ படம் முறியடித்து உள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜெயிலர் படம் உலகநாயகன் கமலின் விக்ரம், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படங்களின் வசூலை முறியடித்தது. இப்போது லியோ ஜெயிலர் வசூலை முந்தியுள்ளது.

இதனால் மீண்டும் சமூக வலைத்தளத்தில் தளபதி விஜய் தான் நம்பர் 1 என்ற பேச்சு தொடங்கிவிட்டது. சில ரஜினி ரசிகர்கள் இந்த வசூல் உண்மையானது இல்லை முற்றிலும் பொய்யான தகவல் என்று பேசி வருகின்றனர்.

லியோ படத்தின் இந்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக நாளை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெற்றி விழா நடக்கவிருக்கிறது. இந்த விழாவிற்கு தளபதி விஜய் முதல் லியோ படத்தில் பணியாற்றிய அத்தனை பேரும் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள். கமல்ஹாசன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வரப்போவதாகவும் தகவல் வருகிறது.

ஆனால் இந்த வெற்றி விழாவிற்கு விஜய் ரசிகர்களுக்கு அனுமதியில்லை. விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி. இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு கவலையளிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஆனாலும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த வெற்றி விழா உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய்யின் குட்டிக்கதையை கேட்க ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கின்றனர். என்ன குட்டிக்கதை கூறப்போகிறார் என்று பொறுத்து இருந்து பாப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: