LEO விஜய் கெட்ட வார்த்தை ஏன் பேசணும்? உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்
லியோ படம் அக்டோபர் 19 வெளியாவதை முன்னிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அதில் லியோ படத்தை பற்றிய நிறைய கேள்விகளுக்கு பதிலை கூறி எதிர்ப்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளார்.
இதுவரை லியோ படம் சந்திக்காத சர்ச்சைகளே இல்லை என்று தான் சொல்லவேண்டும். சிகரெட் பிடித்தது முதல் இசை வெளியீட்டு விழா ரத்து ஆனது வரை பல பிரச்சனைகளை லியோ படம் எதிர்கொண்டது. இதுக்கு ஒரு முடிவே இல்லையா என்பது போல் லியோ டிரெய்லரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜேஸ்வரி பிரியா, ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலர் விஜய் இவ்வாறு கெட்ட வார்த்தை பேசுவது இளைஞர்களுக்கும், அவரை ரசித்து மகிழும் குழந்தைகளுக்கும் ஒரு தவறான முன்னுதாரணம். விஜய்யை பின்தொடர்பவர்கள் அதிகம் இருக்கும் போது இதையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த காட்சி படத்திலிருந்து நீக்கப்பட வேண்டு...

