பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைசி எபிசோட்.. முடிவுக்கு வந்த விஜய் டிவி சீரியல்

விஜய் டிவியில் வெற்றிகரமாக போய் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். 2018-ல் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் கிட்டத்தட்ட 5 வருடங்களாக 1300-க்கும் அதிகமான எபிசோட்டுகளை தாண்டி செல்கிறது.

கொஞ்ச நாளாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிய போகிறது என்ற செய்தி வந்து கொண்டே இருந்தது. அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் பிக்பாஸ் சென்றுவிட்டார்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிய போவது நேற்று உறுதியாகிவிட்டது. நேற்று இந்த சீரியலின் கடைசி எபிசோட் ஷூட்டிங் எடுத்து முடித்துவிட்டார்கள். அந்த புகைப்படங்களை சீரியல் நடிகர்களே சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

இந்த வெற்றிகரமான 5 வருட பயணத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் கேக் கட் செய்து கொண்டாடி உள்ளனர். சித்ரா இறந்த பிறகு முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடித்தார்கள். பின்பு காவ்யாவும் விலக லாவண்யா முல்லையாக நடிக்கிறார்கள்.

முல்லை கதாபாத்திரம் போலவே ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்திலும் முதலில் வைஷாலி நடித்தார்கள். பிறகு அந்த நடிகையை நீக்கிவிட்டு தீபிகா நடிக்க தொடங்கினார்கள்.

அப்புறம் தீபிகாவையும் நீக்கிவிட்டு சாய் காயத்ரியை ஐஸ்வர்யாவாக நடிக்க வைத்தார்கள். சாய் காயத்ரி கதையின் போக்கு மாறவே நான் சீரியல் விட்டு விலகுறேன் என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு வேறு வழியின்றி தீபிகாவையே மீண்டும் ஐஸ்வர்யாவாக நடிக்க வைத்து விட்டார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் இவ்வாறு நடிகர்கள் அடிக்கடி மாறுவது இந்த சீரியல் ரசிகர்களை கடுப்பேத்தியது. அதுவே சிலரை சீரியல்ல முடிங்கப்பா போதும் என்று சொல்ல வைத்தது. ஆனாலும் பலருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவது வருத்தம் தான். இந்த மாத இறுதிக்குள் கிளைமாக்ஸ் எபிசோட் ஒளிபரப்பாகும் என்று தகவல் வருகிறது.

இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியும் உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 விரைவில் வரவுள்ளதாம். இந்த சீசன் 2 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைசி எபிசோட் புகைப்படங்கள் கீழே உள்ள லிங்கில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: