தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நவம்பர் 18 மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். 10 நாட்கள் மேலாகியும் அவர் இன்னும் வீடு திரும்பாதது மக்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் அவரின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு வதந்திகள் பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மனைவி பிரேமலதா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் “கேப்டன் மிகவும் நன்றாக இருக்கிறார். வீண் வதந்திகளை நம்பாதீர். பரப்பவும் செய்யாதீர். விரைவில் பூரணமாய் குணமாகி வீடு திரும்புவார்” என்று பிரேமலதா பேசி இருந்தார். மேலும் கேப்டனின் சமீபத்திய புகைப்படங்களையும் பகிர்ந்து நம்பிக்கை அளித்தார்.
இந்நிலையில் நடிகர் சூரியா கேப்டன் விஜயகாந்த் அவர்களை பற்றி மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.
சூரியா X தளத்தில் “அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.!
கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
சூரியா மட்டுமில்லாமல் திரைத்துறையை சேர்ந்த பலர் விஜயகாந்த் அவர்கள் சீக்கிரமே குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று பிராத்தனை செய்து வருகின்றனர். சிலர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தும் வருகின்றனர்.
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து விரைவில் நற்செய்தி வருமென்று நம்புகிறோம். மீண்டு(ம்) வாருங்கள் கேப்டன்.
