நடிகர் பப்லு பிரித்விராஜ் மனைவி பீனாவை விவாகரத்து செய்துவிட்டு ஷீத்தல் என்ற இளம் பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். ஆனால் சமீப காலமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

ஷீத்தல் பிரித்விராஜை பிரிந்து வாழ்வதை உறுதி செய்யும் விதமாக.. நபர் ஒருவர் ஷீத்தலின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் நீங்கள் பிரித்விராஜை பிரிந்து விட்டீர்களா? என்று கமென்ட்டில் கேட்டுள்ளார். ஷீத்தலும் அந்த கமென்ட்டை லைக் செய்துள்ளார்.

பலரும் பிரித்விராஜை ஷீத்தலின் கணவர் என்று கமென்ட்டில் குறிப்பிட.. ஷீத்தல் அவர் என் கணவர் இல்லை… எங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்று கடுப்பாகி பதில் அளித்து இருந்தார். இவ்வளவு நடந்தும் பிரித்விராஜ் மௌனம் காத்து வந்தார்.
இந்நிலையில் பிரித்விராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதை பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியது “வாழக்கை எப்பயுமே சில விஷயங்களை கற்று கொடுக்கும். அந்த வகையில் நான் இனிமே என்னுடைய வேலை, ஃபேஷன், ஸ்டைல், உடம்பு இதில் மட்டுமே கவனம் செலுத்த போகிறேன்.
நான் என்ன சொன்னாலும் கழுவி ஊற்றி திட்ட சிலர் இருப்பார்கள். எனவே இனிமே என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச போவதில்லை. என்னுடைய காதல் வாழ்கை பற்றி பல வதந்திகள் வலம் வருகிறது.
நானோ இல்லை ஷீத்தலோ இதைப்பற்றி வெளியில் பேசினோமா? இல்லை ஷீத்தலிடம் கேட்டீர்களா? நீங்களாகவே தான் எல்லாமே பேசி கொண்டு இருக்கிறீர்கள். நிறைய கற்று கொண்டேன். இனிமே இப்படி தான் இருக்க போறேன்.” என்று பேசியுள்ளார்.
மேலும் ஷீத்தல் பற்றிய கேள்விகளுக்கும் பிரித்விராஜ் சரியாக பதில் அளிக்கவில்லை.இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்பது இன்னும்வரை வெளிப்படையாக தெரியவில்லை.
