தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் தற்போதைய உடல்நிலை குறித்து அறிய மக்கள் பலரும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். நல்லபடியாக அவர் வீடு திரும்ப வேண்டும் என்பதே பலருடைய ஆசை.

கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது… அவர்க்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்படுகிறது என்று பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. பலரும் அது உண்மையா பொய்யா என்று அறியாமல் பகிர்ந்து வருகின்றனர்.
இதுபோன்ற செய்திகள் தேமுதிக தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்த பலரும் அவரை நேரில் காண மருத்துவமனை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேப்டன் மனைவி திருமதி பிரேமலதா மிகவும் மனம்வருந்தி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “கேப்டன் நன்றாக இருக்கிறார். வீணாக வதந்திகளை நம்பாதீர். பரப்பவும் செய்யாதீர்.
வதந்திகள் தொண்டர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரையும் பாதிக்கிறது. தயவுசெய்து இவ்வாறு செய்யாதீர்கள். இன்னும் இரண்டு நாளில் நற்செய்தி வரும். விரைவில் வீடு திரும்புவார்” என்று பேசியுள்ளார்.

மேலும் கேப்டன் அவர்களின் சமீபத்திய புகைப்படங்களையும் பகிர்ந்து தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்துள்ளார்.
