பருத்திவீரன் சர்ச்சை: “எகத்தாளப் பேச்சு” ஞானவேல்ராஜாவை கிழித்தெடுத்த சமுத்திரக்கனி
பருத்திவீரன் படம் தொடர்பான பிரச்சினை 16 ஆண்டுகளாகியும் தீர்வு இல்லாமல் கன்னித்தீவு கதை போல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கார்த்தி 25 நிகழ்ச்சிக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் அமீர் ஏன் வரவில்லை என்று தொடங்கிய சர்ச்சை மூலம் பருத்திவீரன் படப் பிரச்சினை மீண்டும் வெளிச்சதுக்கு வந்துள்ளது.
இயக்குனர் அமீரும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். யார் சொல்வது தான் உண்மை என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழ.. அமீர்க்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், பாரதிராஜா, கரு பழனியப்பன் என பலரும் குரல் கொடுத்தனர்.
அதன் விளைவாக ஞானவேல்ராஜாவும் என் வார்த்தைகள் அமீர் அண்ணாவை காயப்படுத்தி இருந்தால் அதற்கு வருந்துகிறேன் என்று அறிக்கை வெளியிட்டார்.
இந்த அறிக்கைக்கு சசிகுமார் இவரே திட்டமிட்டு அவமானப்படுத்திட்டு இவரே வருத்தம் தெரிவிப்பாரா? என்று கேள்வி எழுப்பினார். ...


