பிக்பாஸ் தமிழ் சீசன் 7-லிருந்து பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது. இது சரியான முடிவு என்றும்.. இல்லை இது தவறான முடிவும் என்றும்.. பலவித கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கிறது.

பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் பிரதீப் தவறாக பேசுகிறார்.. பெண்களுக்கு அவர் இருப்பதால் பாதுகாப்பு இல்லை.. கதவை மூடாமல் பாத்ரூம் போகிறார்.. என்று பிரதீப் மீது அடுக்கடுக்காய் கமலிடம் குற்றம் சாட்டினர்.
கமல்ஹாசன்னும் ஒவ்வொரு போட்டியாளர்களையும் தனியே அழைத்து பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுக்கலாமா? வேணாமா? என்று கேள்வி வைத்தார். பலரும் அவருக்கு ரெட் கார்டு கொடுப்பது தான் சரி என்று கூறினர்.

கமலும் சக போட்டியாளர்களின் இந்த முடிவை வைத்து பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிவிட்டார்.
இதுவரை எந்த ஒரு சீசனிலும் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டதுக்கு எதிராக முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும்.. பிரதீப்பின் நண்பருமான கவின் பேசியுள்ளார்.
X தளத்தில் பிரதீப் உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து.. “உன்னை பற்றி தெரிந்தவர்களுக்கு.. எப்போதும் உன்னை பற்றி தெரியும்” என்று கவின் சொல்லியுள்ளார்.
நண்பனுக்காக கவின் போட்ட இந்த பதிவில் பலரும் பிரதீப்பை பிக்பாஸ் விட்டு அனுப்பியது தவறான முடிவு என்று கமென்ட் செய்து வருகின்றனர்.
வெளியே வந்த பிரதீப் இந்த ரெட் கார்டு சம்பவத்துக்கு எதுவும் பதிலடி கொடுப்பாரா என்று பொறுத்து இருந்து பாப்போம்.
பிரதீப்க்கு ஆதரவாய் கவின் பேசியது கீழே உள்ள லிங்க்கில்..
