பிக்பாஸ் தமிழ் சீசன் 7-ல் இந்த வாரம் எந்த போட்டியாளர் வெளியேற போகிறார் என்பது மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் மட்டும் தான் யார் வெளியேற போகிறார் என்பதை கணிக்கவே முடியவில்லை.

அந்த வகையில் இந்த வாரம்.. தினேஷ், விசித்திரா, மணி, சரவண விக்ரம், கூல் சுரேஷ், அனன்யா, ஜோவிகா, பூர்ணிமா என மொத்தம் 8 பேர் எலிமினேட்க்கு தேர்வாகி இருந்தனர்.
மக்கள் பலரும் சரவண விக்ரம் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்கு டாடா காட்ட போகிறார் என்று மிகவும் எதிர்ப்பார்த்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் விட்டு இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் அந்த போட்டியாளர் யார் என்பது தெரிய வந்துள்ளது.
கல்வி முக்கியம் இல்லை என்ற கருத்தை பேசி மிகவும் வைரலான வனிதாவின் மகள் ஜோவிகா தான் இந்த வாரம் பிக்பாஸ்சில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய ஜோவிகா.. பிறகு மாயா மற்றும் பூர்ணிமாவுடன் கூட்டு சேர்ந்து மிகவும் மோசமாக விளையாட ஆரம்பித்து விட்டார். பலமுறை ஹவுஸ் கேப்டன் வாய்ப்பு வந்தும் தவறவிட்டார். அதுமட்டுமில்லாமல் சோம்பேறியாக தூங்கிக் கொண்டே இருப்பது பலரையும் எரிச்சல் அடைய வைத்தது.

மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியாளர் தான் ஜோவிகா. இப்படி வாய்ப்பை கோட்டை விட்டது அவரின் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே. இருந்தாலும் 60 நாட்கள் தாக்குப்பிடித்தது பாராட்டப் படவேண்டிய விஷயம்.
ஜோவிகா இல்லாமல் பிக்பாஸ் வீடு எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பாப்போம்.
