பிக்பாஸ் பிரதீப் கமலுக்கு கொடுத்த தரமான பதிலடி.. வைரலாகும் பதிவு

பிக்பாஸில் இருந்து ரெட் கார்டு பெற்று பிரதீப் வெளியேறியது சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து சர்ச்சையாக பேசப்படுகிறது. பலரும் மற்ற போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனை இது தொடர்பாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

பிரதீப்பிற்கு ஆதரவாக அவர் ரசிகர்கள் பல குறும்படங்களை வெளியிட்டு இது திட்டமிட்டு நடந்த சதி என்றும்.. பிரதீப் பேசிய பல விஷயங்களை ரவீனா திரித்து கூறியுள்ளார் என்றும் பேசி வருகிறார்கள்.

உண்மைதன்மையை அறியாமல் கமல்ஹாசன் பிரதீப்பை வெளியே அனுப்பியது பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் பிரதீப் மறைமுகமாக கமல்ஹாசன்க்கு பதிலடி கொடுத்தது வைரலாகி வருகிறது. கமல்ஹாசனின் 69வது பிறந்தநாளான இன்று.. அவர்க்கு வாழ்த்து சொல்லும் விதமாக பிரதீப் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் பிரதீப் கூறியது “நான் கமல் சாரின் பெரிய ரசிகன்.. சத்தியமாக சொல்கிறேன்.

உங்களின் 69வது பிறந்தநாளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். எனக்கு உங்கள் கலை மீதும், சினிமாவில் உங்கள் பங்களிப்பு மீதும் மரியாதை உண்டு. லவ் யூ.. நல்லா இருங்க.. தீர விசாரிப்பதே மெய்”

என்று கூறி அந்த பதிவில் நக்கலாக வசூல் ராஜா எம்பிபிஸ் படத்தில் வரும் காட்சியும் இணைத்துள்ளார்.

மேலும் ஆதரவாளர்களுக்கும் ஒரு வேண்டுதல் வைத்துள்ளார். அவர் கூறியது “பிக்பாஸ் சார்ந்த விஷயங்கள் எல்லாம் போதும் என்று நினைக்கிறேன். சிலர் வெறுப்பை பரப்பி.. அந்த வெறுப்பை வைத்து யூடியூபர்களும்.. கிரியேட்டர்களும் வியாபாரம் செய்கின்றனர். வாழட்டும். நான் சுயமாக எதையாவது உருவாக்க விரும்புகிறேன். இதில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. ப்ரீயாக விடுங்க.. வேலையை பாப்போம் கடந்து செல்வோம்”

என்று இனி பிக்பாஸ் தொடர்பாக எதுவும் பேச போவதில்லை என்று கூறியுள்ளார்.

பிரதீப்பின் இந்த முடிவை பலரும் பாராட்டி அவர் மேலும் சாதிக்க வாழ்த்துகளை சொல்லி வருகிறார்கள்.

கமல்ஹாசன்க்கு பிரதீப்பின் பதிலடி பேச்சு கீழே உள்ள லிங்க்கில்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: