பிக்பாஸ்சில் பிரதீப் ரெட் கார்டு மூலம் வெளியே அனுப்பப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பலரின் கவனம் மாயா மீது திரும்பி உள்ளது. அவரை சீக்கிரமே வெளியேற்ற வேண்டும் என்பதே பலரின் கருத்து.

பாடகி சுஜித்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் மாயா பற்றி பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருந்தார். அதில் சுஜித்ரா கூறியது ” மாயா ஒரு லெஸ்பியன் அதாவது ஓரினச்சேர்க்கையாளர். இது பிரதீப்க்கும் தெரியும். அதனால் தான் அவர் ஒரு பையன் உடன் பழகுவது போல் மாயாவை மச்சான் என்று அழைத்து பேசி வந்தார்.

மாயா இயக்குனர் கௌதம் மேனனின் பெண் உதவி இயக்குனரை காதலித்தும் வந்தார். பலர் பணத்தை ஏமாற்றியுள்ளார். அவர் பூர்ணிமா உடன் நெருங்கி பழகி வருகிறார். ஆனால் பூர்ணிமாக்கு மாயா ஒரு லெஸ்பியன் என்பது தெரியாது. மாயா இவ்வாறு செய்வது ரொம்ப தவறு” என்று பாடகி சுசித்ரா பேசியிருந்தார்.
இந்நிலையில் மாயாவின் அக்கா ஸ்வாகதா சுஜித்ராக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியது ” மாயா பற்றி சுஜித்ரா சொன்னது எல்லாமே பொய்.. பொய்யாக ஜோடிக்கப்பட்டது. சுஜித்ரா சொல்வதில் ஒரு துளி உண்மை கூட இல்லை.

LGBTQ+ சமூகத்தை பற்றி அவங்க பேசுன விதம் ரொம்ப இழிவா இருக்கு.. அது முற்றிலும் கண்டிக்கதக்கது. பிக்பாஸ் உள்ள இருக்க மாயா சுஜித்ராவின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல முடியாது என்று தெரிந்து இவ்வாறு பேசுவது மோசமான செயல்.
இவங்க சொல்ற இந்த பொய்யான குற்றச்சாட்டுகள் எல்லாமே மக்களும் தெரியும். மாயாக்கு தூண்போல் ஆதரவாக இருக்கும் எல்லார்க்குமே நன்றி.
கண்டிப்பாக சட்டப்படி சுஜித்ரா மீது மாயாவும் அவளின் குடும்பமும் நடவடிக்கை எடுக்கும் ” என்று இன்ஸ்டாகிராமில் இதை ஸ்வாகதா தங்கை மாயாவை ஆதரித்து பேசியிருக்கிறார்.
இந்தவார பிக்பாஸ்சில் ஐஷு எலிமினெட் ஆகியுள்ளார் என்ற தகவலும் வந்துள்ளது பொறுத்து இருந்து பார்ப்போம்.
மாயா அக்கா ஸ்வாகதா சுஜித்ரா பற்றி பேசியது கீழே உள்ள லிங்க்கில்..
