பிக்பாஸ் பிரதீப் ரெட் கார்டு சர்ச்சை..பிரியங்காவின் தரமான பதிலடி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு .. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தோடு வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றம் நியாயம் இல்லை என்றும், சரியானது என்றும் பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

பிரதீப்பின் வெளியேற்றத்தை எதிர்த்து , முந்தைய சீசன் பிக் பாஸ்-ன் போட்டியாளர்களான அமீர், பாவனி, நிரூப், ராம் ராமசாமி , நிவாஷினி ஆகியோர் தங்களது கருத்துக்களை பிரதீப்க்கு ஆதரவாக X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் பிரியங்கா, பிரதீப்பிற்கு ஆதரவாக செய்த போஸ்ட் இப்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

விஜய் டிவியின் முக்கிய புள்ளியான பிரியங்காவே பிரதீப்பின் வெளியேற்றத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

பிரபலங்கள் மட்டுமன்றி, மக்களும் பிரதீப்பின் வெளியேற்றத்திற்கு, சக போட்டியாளர்களின் சூழ்ச்சியே காரணம் என்று குற்றம்சாட்டி வருகின்றனர். பிரதீப் வலிமையான போட்டியாளர்..மாயா மற்றும் பூர்ணிமா, “பெண்களின் பாதுகாப்பு” என்ற ஆயுதத்தை தந்திரமாக பயன்படுத்தி பிரதீப்பை வெளியேற்றிவிட்டனர் என்ற கருத்தும் பலரால் முன்நிறுத்தி பேசப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு பாதுகாப்பற்றவர் என்ற காரணத்தோடு அவர் வெளியேற்றப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது என்று பலரும் கூறும் நிலையில், உங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்.

பிக் பாஸ் பிரபலங்களும், பிரியங்காவும் பிரதீப்பின் வெளியேற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்தது கீழே உள்ள லிங்க்கில்….

1 Comment

  • Anusuya

    மாயவையும் பூர்ணிமாவையும் வீட்டை விட்டு வெளி ஏற்றுங்கள் மற்றவர் அழும் போது மாயா நக்கலாக சரிப்பது கமலுக்கு தப்பா தெரியலையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: