லியோ படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாக உள்ளதால் தளபதி விஜய் ரசிகர்கள் பலரும் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் லியோ படத்தின் சென்சார் ரிப்போர்ட் சமூக வலைத்தளத்தில் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த சென்சார் ரிப்போர்ட்டில் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட கெட்ட வார்த்தைகள் படத்தில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லியோ படத்திற்க்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டதாக நேற்றே அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சென்சார் ரிப்போர்ட் இப்போது பெரிய அளவில் பேசப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. படத்தின் நீளமும் 2 மணிநேரம் 44 நிமிடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த சென்சார் ரிப்போர்ட் மிகவும் வைரலாகவே அதனை பற்றிய உண்மை இப்பொழுது வெளியாகி உள்ளது. அந்த சென்சார் ரிப்போர்ட் முற்றிலும் போலியான ஒன்று என்பது தெரிய வந்துள்ளது. தளபதி விஜய்க்கு களங்கம் ஏற்படுத்தவே சில விஷமிகள் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர் என விஜய் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க லியோ படத்தில் இடம்பெற்றுள்ள ஹைனா சண்டைக்காட்சி பெரியளவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த சண்டைக்காட்சியை பற்றி படத்தின் வசனகர்த்தா பேசியது வைரலாகி வருகிறது. அதன் விவரம் கீழே உள்ள லிங்க்கில் உள்ளது.
