எதிர்நீச்சலிருந்து விலகிய வேல ராமமூர்த்தி? இதுதானா விஷயம்.. வெளிவந்த உண்மை

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க அவருக்கு பதிலாக ஆதிகுணசேகரனாக நடிக்க வந்தவர் தான் நடிகர் வேல ராமமூர்த்தி.

வேல ராமமூர்த்தி அறிமுகமான முதல் எபிசோடில் போலீசை எட்டி உதைத்து சண்டையில் ஈடுபட்டு அதிரடி காட்டினார். இதை பார்த்த எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் சிலர் மாரிமுத்து இப்படியெல்லாம் பண்ணமாட்டாரே.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கு என்று கூறி வந்தனர்.

சிலர் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்திற்கு வேல ராமமூர்த்தி தான் சரியான தேர்வு என்று கூறி வந்தனர். ஆதிகுணசேகரன் இல்லாமல் சலிப்பை ஏற்படுத்திய எதிர்நீச்சல் சீரியல்.. மீண்டும் வேல ராமமூர்த்தி ஆதிகுணசேகரனாக நடிக்க வந்த பிறகு டிஆர்பியும் உயர தொடங்கியது.

ஆனால் வந்த வேகத்தில் ஆதிகுணசேகரன் காணாமல் போய்விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். போலீசை அடித்த காரணத்திற்க்காக அவரை கைது செய்து 7 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைத்து வைத்துவிட்டார்கள்.

இது எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது தான் வந்தார் அதுக்குள்ள ஜெயிலா?என்னப்பா இது என்று புலம்பி வருகின்றனர். இது ஒருப்படி மேலே போய் வேல ராமமூர்த்தியின் நடிப்பு பொருத்தமாக இல்லை.. அதனால் தான் இயக்குனர் திருச்செல்வம் ஆதிகுணசேகரன் ஜெயிலுக்கு செல்வது போல் கதையை மாற்றிவிட்டார். இனிமேல் வேல ராமமூர்த்தி நடிக்கமாட்டார். வேறு ஒருவரை நடிக்க வைக்க தேடி வருகின்றனர் என்று தகவல்கள் வர தொடங்கியது.

இந்நிலையில் வேல ராமமூர்த்தியே இதுக்கு பதிலை சொல்லிவிட்டார். அவர் படமொன்றின் ஷூட்டிங்காக பாரீஸ் சென்றுள்ளார். அதை அவருடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் தான் அவர் எதிர்நீச்சல் சீரியலில் ஜெயிலுக்கு செல்வதுபோல் காட்சி வைத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் ஆதிகுணசேகரனாக தொடர்ந்து நடிப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: