லியோவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள்

லியோ வருகின்ற அக்டோபர் 19 வெளியாவதை தொடர்ந்து படத்திற்கான ப்ரோமோஷன்கள் முழுவீச்சில் போய்க்கொண்டு இருக்கிறது. இன்று அன்பெனும் என்ற மூன்றாவது பாடல் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியொன்றில் இந்த பாடலை பற்றி மிகவும் வியந்துப் பேசியிருந்தார். என்னுடைய முந்தைய படங்களில் இப்படியொரு பாடல் இருந்ததே இல்லை.

இது எனக்கே புது அனுபவமாக இருந்தது. படத்தில் சில ரொமான்ஸ் காட்சிகளும் என்னால் முடிந்த வரை முயற்சி செய்து எடுத்துள்ளேன். அவை நன்றாகவும் வந்துள்ளது என்று கூறியிருந்தார்.

ரசிகர்களும் லோகேஷ் படத்தில் மெலோடி பாடலா என்று இந்த பாடலுக்கு பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டுயிருக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க லியோ டிரெய்லரில் ஏற்பட்ட மாற்றம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. லியோ டிரெய்லரில் விஜய் ஒரு காட்சியில் திரிஷாவிடம் கோபமாக பேசும்பொழுது ஒரு கெட்ட வார்த்தையை பயன்படுத்தி இருப்பார்.

டிரெய்லரில் சென்சார் செய்யாமல் அந்த காட்சி இடம்பெற்றது அதிர்ச்சியாக தான் இருந்தது. இது சமூக ஆர்வலர்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு உச்ச நடிகர் இவ்வாறு கெட்ட வார்த்தை பயன்படுத்துவது தவறான முன்னுதாரணம் என்று கூறிவந்தார்கள்.

லோகேஷ் கனகராஜும் நான் தான் விஜய் அண்ணாவை அவ்வாறு பேச வைத்தேன். படத்திற்கு அது தேவைப்பட்டது. விஜய் அண்ணாவும் இது சரியாக இருக்குமா என்று கேட்டார். நான் தான் இந்த காட்சியில் இது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கூறினேன். ஒரு மனிதனுடைய கோபத்தின் வெளிப்பாடு தான் அது. படத்தில் உள்ள பார்த்திபன் என்ற கதாப்பாத்திரம் தான் அப்படி பேசுகிறதே தவிர விஜய் அண்ணா அப்படி பேசவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் திட்ட வேண்டுமென்றால் என்னை திட்டுங்கள். விஜய் அண்ணாவை விட்டு விடுங்கள் என்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் டிரெய்லரில் அந்த கெட்ட வார்த்தையின் ஒலி நீக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ரசிகர்கள் சிலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையரங்கிலும் இந்த காட்சி ஒலி நீக்கப்பட்டு தான் வரும் என்று சென்சார் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து இப்போது டிரெய்லரிலும் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்கள்.

லியோ படத்தின் சென்சார் ரிப்போர்ட் பற்றி அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: