மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்படாமல் உள்ளது. பலரும் குடிக்க தண்ணீர், உணவு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மக்களுக்கு உதவ பலர் முன்வந்தும்.. புயலால் ஏற்பட்ட பாதிப்பு பெரியது என்பதால் இன்னும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் பலர் வீடுகளை இழந்து வீதிகளில் தவிக்கும் அவலநிலை உண்டாகியுள்ளது.
பல பொருட்கள் சேதம் ஆகியுள்ளது. மேலும் மின்சாரம், தொலைதொடர்பு, இணையதள வசதி இல்லாமல் பெரும் துயரத்தில் சென்னை மக்கள் சிக்கி உள்ளனர்.
இந்நிலையில் தளபதி விஜய் பாதிக்கபட்ட மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார்.
X தளத்தில் தளபதி விஜய் “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கைகோர்ப்போம்.. துயர்துடைப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
மக்களுக்காக தளபதி விஜய் பேசியது பலர் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
