மன்சூர் அலிகான் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் “லியோ படத்தில் எனக்கும் திரிஷாவுக்கும் படுக்கை அறை காட்சி இல்லை.. இப்போலாம் கற்பழிக்க விடமாட்றாங்க” என்று மிகவும் அநாகரிகமாக பேசியிருந்தார். இதற்கு திரிஷா மட்டுமில்லாமல் திரைத்துறையை சார்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்காக மன்சூர் அலிகான் நேற்று (நவம்பர் 23) காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் ” நான் திரிஷாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை.. ஒரு நடிகையாக அவங்கள பெரிதும் மதிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு நடிகை திரிஷாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பது “எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு!
இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்” என்று ஒரு பெரிய அறிக்கையை மூலம் மன்னிப்பு கேட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பலரும் மன்சூர் அலிகான் கண்டிப்பாக மன்னிப்பு கேட்கமாட்டார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் தவறை உணர்ந்து அவர் வெளியிட்ட இந்த மன்னிப்பு கடிதம் சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
