திரிஷா என்னை மன்னித்துவிடு.. நடிகர் மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு
மன்சூர் அலிகான் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் "லியோ படத்தில் எனக்கும் திரிஷாவுக்கும் படுக்கை அறை காட்சி இல்லை.. இப்போலாம் கற்பழிக்க விடமாட்றாங்க" என்று மிகவும் அநாகரிகமாக பேசியிருந்தார். இதற்கு திரிஷா மட்டுமில்லாமல் திரைத்துறையை சார்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்த சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்காக மன்சூர் அலிகான் நேற்று (நவம்பர் 23) காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் " நான் திரிஷாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை.. ஒரு நடிகையாக அவங்கள பெரிதும் மதிக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு நடிகை திரிஷாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பது "எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு!இல்லறமாம் நல்லறத்தில்...

