பிக்பாஸ் மாயா, பூர்ணிமாக்கு என்னை பத்தி பேச தகுதி இருக்கா?கிழித்தெடுத்த ரச்சிதா

பிக்பாஸ்சில் வரும் பாதி பிரச்சனைகளுக்கு முழு காரணமே மாயா தான் என்று பலரும் கூறும் வகையில் அவரின் செயல்பாடுகள் இருக்கிறது. யாரை எப்படி வம்பிழுக்கலாம் என்று முழுநேரமும் பூர்ணிமாவுடன் திட்டம் தீட்டி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மாயா பூர்ணிமாவுடன் சக போட்டியாளர் தினேஷ் பற்றி பேசியது இப்போது சர்ச்சையாகி உள்ளது.

மாயா தினேஷ் மனைவி ரச்சிதா என்று பூர்ணிமாவிடம் சொல்கிறார்.
பூர்ணிமாவும் அதை வைத்து என்ன செய்வது என்று கேட்டுக்கிறார்கள். அதற்கு மாயா அதை பற்றி தினேஷை பேச வைப்போம் என்கிறார். பூர்ணிமாவும் ஓகே அப்படியே பண்ணிருவோம் என்று பதிலளிக்கிறார்.

இப்படி போட்டியாளரின் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து விளையாடுவதுலாம் படுமோசம் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ரச்சிதாவே இதை பற்றி பேசி மாயா மற்றும் பூர்ணிமாக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார். ரச்சிதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பது ” இது தனிப்பட்ட வாழ்க்கை.. மீடியாவில் பிரபலங்களுக்கு ரகசியம் என்ற ஒன்று இருக்காது தான்.. ஆனாலும் அதைப்பற்றி பேசுவது உங்கள் வேலை இல்லை..

என் வாழ்க்கை ஒன்றும் பொது பிரச்சனை இல்லை எல்லாரும் விவாதித்து கருத்து கூறுவதற்கு.. எல்லார்க்கும் இங்கு பல பிரச்சனைகள் உண்டு. யாராலையும் பல மனஅதிர்ச்சிகளை தாங்க முடியாது. முடிந்தது முடிந்தது தான்.

நீங்க விளையாட என்னை பற்றியும்.. என் வாழ்க்கை பற்றியும் பேசாதீர்கள். நீங்கள் விளையாட இது ஒரு தலைப்பா? வெட்கமாக இல்லை?

பிக்பாஸ்சில் என் பேரை வைத்து.. எங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை பற்றி பேசி அசிங்கபடுத்துவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

அப்படி செய்தால் கண்டிப்பாக வருத்தப்படுவீர்கள். இப்போதே நிறுத்திக் கொள்ளுங்கள். BULLY GANG இதுப்போன்ற திட்டங்கள் எல்லாம் போதும். ஒழுங்கா விளையாடுங்கள்.. என்னை இழுக்காதீர்கள்.

என்னை பற்றி பேச உங்களுக்கு உரிமையும் இல்லை தகுதியும் இல்லை. பிக்பாஸ் டீம் அவங்களை எச்சரியுங்கள். வாழு வாழ விடு ” என்று ரச்சிதா மிகவும் கடுப்பாகி மாயா மற்றும் பூர்ணிமா செயலை கண்டித்துள்ளார்.

இந்த வார எபிசோடில் கமலும் BULLY GANG-யை தரமாக கையாண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இனிமேல் மாயாவின் ஆட்டம் அடங்குமா என்று பார்ப்போம்.

மாயா மற்றும் பூர்ணிமா செயலை கண்டித்து ரச்சிதா பேசியது கீழே உள்ள லிங்க்கில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: