பிக்பாஸ் வீட்டிலிருந்து பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது உள்ளது. இவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சக போட்டியாளர்கள் ரெட் கார்டு கொடுக்கவே அதன் அடிப்படையில் பிரதீப் வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.

பிரதீப்பை விட மோசமான செயல்கள் செய்தவர்கள் எல்லாம் உள்ளே இருக்கும்போது.. பிரதீப்பை கண்டித்து விட்டு இருக்கலாம்.. மீண்டும் அவர் அதே தவறை செய்தால் வெளியே அனுப்பி இருக்கலாம். இப்படி சற்றும் யோசிக்காமல் அவரை அசிங்கப்படுத்தி அனுப்பியது மிகவும் தவறு என்று பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.
நண்பன் கவின்னும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டதுக்கு எதிராக பிரதீப்க்கு ஆதரவாக பேசியுள்ளார். கவின் மட்டுமில்லாமல் அமீர், பாவனி, நிரூப், யுகேந்தரன், சனம், நிவாஷினி என பல பிக்பாஸ் போட்டியாளர்கள் பிரதீப்க்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ்சை விட்டு வெளியே வந்த பிரதீப் முதல்முறையாக இந்த சம்பவத்தை பற்றி பேசியுள்ளார்.
X தளத்தில் அவர் வாங்கிய ரெட் கார்டு, லைக்ஸ் மற்றும் டிஷ்லைக் புகைப்படத்தை பகிர்ந்து.. “என்னுடைய பிக்பாஸ் 7 வெற்றிப் பதக்கங்கள்.. எதோ என்னால முடிஞ்சது.. சிம்பிள் ஸ்டார்” என்று கூறியுள்ளார்.
பிரதீப் பிக்பாஸ் விட்டு வெளியேற்றப்பட்டதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு போட்ட இந்த பதிவுக்கு பலரும் அவருக்கு ஆதரவாக கமென்ட் செய்து வருகின்றனர்.

போட்டியாளர் மாயா தான் சக போட்டியாளர்களின் மனதை மாற்றி பிரதீப்க்கு எதிராக செயல்பட வைத்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் பலரும் பேசி கொண்டு இருக்கிறார்கள்.
பிரதீப்க்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
பிக்பாஸ் விட்டு வெளியே வந்த பிரதீப்பின் முதல் பேச்சு கீழே உள்ள லிங்க்கில்..
