2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து செங்கோட்டையன் அவர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சியில் தலைவர் விஜய் தலைமையில் இணைந்தார். இந்த எதிர்பாராத திருப்பம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் செங்கோட்டையன் தவெக சார்பில் போட்டியிடும் தொகுதியில் வெற்றி நிச்சயம் என்று பேசி வருகிறார்கள்.
இந்த ஒரு சூழ்நிலையில் மக்களின் கவனம் மற்ற தொகுதி வேட்பாளர்களின் பக்கமும் திரும்பி உள்ளது. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் தவெக சார்பாக முக்கிய தொழிலதிபர் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் மோசமான சாலைகள், எங்கும் குப்பைகள், நிறைவடையாத பணிகள் என்று கந்தரகோலத்தில் இருப்பதாக தொகுதிவாசிகள் கூறி வருவதாக சொல்லபடுகிறது.
திமுக கடந்த தேர்தலின் போது இந்த தொகுதிக்கு கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது குறிப்பாக குமரன் நகர், இளங்கோ நகர், ஜி கே எம் காலனி போன்ற பகுதிகளில் மழைநீர் வடிகால் பிரச்சனை மிகப் பெரிய அளவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
மழைக்காலங்களில் கொளத்தூர் மிகப்பெரிய பாதிப்பு எதிர்கொண்டு வருகிறதாகவும், குடிநீரில் கழிவுநீர் கலப்பு, கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுதல், தண்ணீர் தேங்குதல், கொசுத்தொல்லை என பல பிரச்சினைகளால் மக்கள் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை என அரசு ஊழியர்கள் விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் அதிகப்படியான அரசு ஊழியர்கள் உள்ளதால் மிகப்பெரிய தலைவலியை திமுகவிற்கு ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல பெரும்பாலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அதிகமாக கொளத்தூர் பகுதியில் வசிக்கின்றனர். எனவே மாநகராட்சி துணை பணியாளர்கள் 13 நாட்கள் போராடியும் முதலமைச்சர் கண்டு கொள்ளாதது அவர்கள் மத்தியில் ரண வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்களும் இந்த முறை திமுகவிற்கு எதிராக நிற்பார்கள் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் எத்தனை அம்சங்களையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தமிழக வெற்றிக் கழகம் முனைப்பு காட்டி வருகிறது.
கொளத்தூரில் இளைஞர்கள், பெண்களின் ஆதரவு விஜய்க்கு அதிகமாக உள்ளதாகவும், இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தமிழக வெற்றிக்கழகத்தினர் முனைப்பாக உள்ளனர் எனவும் ஸ்டாலினுக்கு எதிராக முதலியார் சமூகத்தையே சேர்ந்த அனைத்து தரப்பினரும் அரவணைத்து செல்லக்கூடிய வேட்பாளராக YBM TRAVELS பாலாஜியை தமிழக வெற்றி கழகம் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமூக ஆர்வலராக வலம் வந்த அவர் தொகுதி முழுவதும் நற்பெயரை பெற்றுள்ளார் பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் பாதிக்கப்படும் மக்களுக்கு உறுதுணையாக நின்றுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு பக்கத்துணையாக பல்வேறு காலகட்டங்களில் நின்ற இவர் முதல் மாநாடு தொடங்கி அண்மையில் நடந்த கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தனது பேருந்துகளில் அழைத்து வந்து விஜயை சந்திக்க வைத்து நல்லப்படியாக மீண்டும் கரூரில் விட்டதில் நெகிழ்ந்த விஜய் நெகிழ்ந்தகாக சொல்லபடுகிறது.

இதனால் கொளத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் சாய்ஸாக இவரை தேர்தெடுத்துள்ளதாக தகவல்.
சேகர்பாபுவின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்துள்ள திமுகவினரும் மாற்று வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் மனநிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி வரக்கூடிய சூழ்நிலையில் அதனை பயன்படுத்தும் விதமாக பாலாஜியை களம் இறக்க தவெக
திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பாலாஜி நிற்கும் பட்சத்தில் கொளத்தூர் தொகுதியில் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
