திமுகவை வெல்ல தவெக போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்? களத்தில் இறங்கிய முக்கிய தொழிலதிபர்
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து செங்கோட்டையன் அவர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சியில் தலைவர் விஜய் தலைமையில் இணைந்தார். இந்த எதிர்பாராத திருப்பம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் செங்கோட்டையன் தவெக சார்பில் போட்டியிடும் தொகுதியில் வெற்றி நிச்சயம் என்று பேசி வருகிறார்கள்.
இந்த ஒரு சூழ்நிலையில் மக்களின் கவனம் மற்ற தொகுதி வேட்பாளர்களின் பக்கமும் திரும்பி உள்ளது. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் தவெக சார்பாக முக்கிய தொழிலதிபர் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் மோசமான சாலைகள், எங்கும் குப்பைகள், நிறைவடையாத பணிகள் என்று கந்தரகோலத்தில் இருப்ப...

