பிக்பாஸ் 7 ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்ட பிரதீப்.. கவின் கொடுத்த பதிலடி
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-லிருந்து பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது. இது சரியான முடிவு என்றும்.. இல்லை இது தவறான முடிவும் என்றும்.. பலவித கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கிறது.
பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் பிரதீப் தவறாக பேசுகிறார்.. பெண்களுக்கு அவர் இருப்பதால் பாதுகாப்பு இல்லை.. கதவை மூடாமல் பாத்ரூம் போகிறார்.. என்று பிரதீப் மீது அடுக்கடுக்காய் கமலிடம் குற்றம் சாட்டினர்.
கமல்ஹாசன்னும் ஒவ்வொரு போட்டியாளர்களையும் தனியே அழைத்து பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுக்கலாமா? வேணாமா? என்று கேள்வி வைத்தார். பலரும் அவருக்கு ரெட் கார்டு கொடுப்பது தான் சரி என்று கூறினர்.
கமலும் சக போட்டியாளர்களின் இந்த முடிவை வைத்து பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிவிட்டார்.இதுவரை எந்த ஒரு சீசனிலும் இப்படி ஒரு சம்பவம...




