Cinema

ஓய்வை அறிவித்த சூப்பர் ஹிட் பட ஹீரோ : இது தான் உண்மை காரணமா ? 
Cinema

ஓய்வை அறிவித்த சூப்பர் ஹிட் பட ஹீரோ : இது தான் உண்மை காரணமா ? 

தொலைக்காட்சி தொடர்களில் தனது பயணத்தை தொடங்கி சினிமாவில் பல துறைகளில் சாதனை படைத்தவர்கள் பலர் உள்ளார்கள்.  அந்த வகையில் இந்தி சீரியல்கள் மூலம் தன் பயணத்தை துவங்கியவர் விக்ராந்த் மாஸி.  கடந்த 2013ம் ஆண்டில் இருந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும் 2023ம் ஆண்டு வெளியான 12வது ஃபெயில்(12th fail) படம் விக்ராந்த் மாஸிக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. அதன் பிறகு அனைவராலும் கவனிக்கப்படும் நடிகரானார் விக்ராந்த் மாஸி. 12வது ஃபெயில்(12th fail)படம் ஓடிடி தளத்தில் வெளியாகி அப்படம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. 2013ல் வெளிவந்த 'லூடேரா' படத்தில் அறிமுகமாகி கடந்த 14 வருடங்களாக நடித்து வருகிறார் . விக்ராந்த் மாஸி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான செக்டர் 36, தி சபர்மதி ரிப்போர்ட் ஆகிய படங்களும் வெற்றி பெற்றன. இதிலும் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ திரைப்படத்திற்கு சில மாநிலங்கள் வரி விலக்கு அ...
விஜய் பட சாதனையை முறியடித்த சிவகார்த்திகேயன் ! மிரளவைக்கும் SK 25 பட்ஜெட் ? எவ்வளவுனு உங்களுக்கு தெரியுமா ?
Cinema

விஜய் பட சாதனையை முறியடித்த சிவகார்த்திகேயன் ! மிரளவைக்கும் SK 25 பட்ஜெட் ? எவ்வளவுனு உங்களுக்கு தெரியுமா ?

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகவும், கவனிக்கத் தகுந்தவராக உள்ளார். நடிகராக மட்டும் இல்லாமல், பாடலாசிரியராக, பாடகராக, தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான அமரன் படம் நிஜ கதையை மையப்படுத்தி சினிமாவிற்காக எதையும் புகுத்தாமல் அழகாக உருவாகியிருக்கும் இப்படம் ரிலீஸ் ஆன நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ரிலீஸ் ஆகி 26 நாள் முடிவில் இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 158 கோடி வரை வசூல் செய்துள்ளது . வரும் நாட்களிலும் கண்டிப்பாக படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . சிவகார்த்திகேயனின் அமரன் படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. இந்த நிலையில் தெலுங்கில் அமரன் படம் விஜய்யின் லியோ பட சாதனையை முறியடித்துள்ளது. அமரன் படம் ரூ.45 கோடி வரை வசூல் செய்து ரூ.44 கோ...
கங்குவா படம் 100 கோடி நஷ்டமா.. உண்மையை போட்டு  உடைத்த சினிமா பிரபலம்
Cinema

கங்குவா படம் 100 கோடி நஷ்டமா.. உண்மையை போட்டு  உடைத்த சினிமா பிரபலம்

2024-ம் ஆண்டில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவரும் என்ற காரணத்தால் இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு சிறப்பான ஆண்டு என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும் ஏமாற்றத்தையே தந்தது. இந்த ஆண்டில் இதுவரையில் 200-க்கு  மேற்பட்ட  படங்கள் வெளிவந்துள்ள நிலையில் அதிக பட்சமாக 20 படங்கள் வரையில்தான் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படங்களாக அமைந்தன.  இந்த ஆண்டில் அதிகபட்ச வசூலாக விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படம் 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதற்கடுத்த இடத்தில் 310 கோடியை சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' படம். ரஜினி நடித்த 'வேட்டையன்', கமல் நடித்த 'இந்தியன் 2' தனுஷ் நடித்த 'ராயன்',விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா', விக்ரம் நடித்த 'தங்கலான்' ஆகிய படங்கள் 100 கோடியைக் கடந்தன. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உரு...
18+ கவர்ச்சி வீடியோவை பகிர்ந்த லோகேஷ்? வெளிவந்த உண்மை விளக்கம்
Cinema

18+ கவர்ச்சி வீடியோவை பகிர்ந்த லோகேஷ்? வெளிவந்த உண்மை விளக்கம்

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து கோலிவுட்டின் நம்பர் 1 இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் லோகேஷ் பற்றி சமூக வலைத்தளத்தில் ஒரு சர்ச்சை பரவி வருகிறது. லோகேஷ் கனகராஜின் ஃபேஸ்புக் பக்கத்தில் வைரல் யோகா என்ற பெயரில் பெண்களின் சற்று ஆபாசமான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோக்களை பார்த்த பலரும் என்ன இதுப்போன்ற வீடியோக்களை லோகேஷ் பகிர்ந்து வருகிறார் என்று அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பிறகு தான் லோகேஷ் கனகராஜ் பெயரில் இயங்கி வரும் அந்த ஃபேஸ்புக் பக்கம் HACK செய்யப்பட்டு உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தை பற்றி லோகேஷ் கனகராஜ் X தளத்தில் "நான் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என இந்த இரண்டு சமூக வலைத்தளத்தில் மட்டுமே உள்ளேன். வேற எந்த...
சீரியல் நடிகை சங்கீதாவை கரம்பிடித்த காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி
Cinema, Television

சீரியல் நடிகை சங்கீதாவை கரம்பிடித்த காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி

இயக்குனர் நெல்சனின் கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு காமெடியனாக அறிமுகம் ஆனவர் தான் ரெடின் கிங்ஸ்லி. அதன் பிறகு பல படங்களில் காமெடியனாக நடித்து முன்னனி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி நடிகை சங்கீதாவை திருமணம் செய்துள்ளார். https://youtu.be/X6Q2_0LvhDQ டான்சர் சதீஷ் X தளத்தில் ரெடின் கிங்ஸ்லி, சங்கீதாவின் திருமண புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அதில் " திருமண நல்வாழ்த்துகள் ரெடின் கிங்ஸ்லி. உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையட்டும். இது உண்மை திருமணம் தான்.. படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல" என்று சதீஷ் கூறியுள்ளார். https://twitter.com/dancersatz/status/1733741624621150231?t=S-gBbtNnMyvKtcAhFHxxQg&s=19 சங்கீதா தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு சிறிய தோற்றத்தில் நடித்தது மூலம் பிரபலமானவர். பிறகு பல படங்களில் சின்ன கதாப்பாத்த...
லேடி சூப்பர்ஸ்டார்ன்னு சொல்லாதீங்க.. நயன்தாராவின் வருத்தமான பேச்சு
Cinema

லேடி சூப்பர்ஸ்டார்ன்னு சொல்லாதீங்க.. நயன்தாராவின் வருத்தமான பேச்சு

நயன்தாரா 75 படங்கள் நடித்து 20 வருடம் சினிமா துறையில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். ஒரு நடிகையாக இவ்வளவு வருடம் நிலைத்து நிற்பது சாதாரண விஷயம் அல்ல.. இதனால் ரசிகர்கள் இவருக்கு கொடுத்த பட்டம் தான் லேடி சூப்பர்ஸ்டார். ஆரம்பத்தில் இந்த லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. ஆனால் சமீப காலமாக பலரும் நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைப்பதை விமர்சித்து வருகின்றனர். நயன்தாராவின் படங்கள் சரியாக போகாதது இதற்கு காரணமா என்று தெரியவில்லை. இந்நிலையில் நயன்தாரா சமீபத்திய பேட்டியில் லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தை பற்றி வருத்தப்பட்டு பேசியுள்ளார். https://youtu.be/rzNlBWIq0oc அதில் அவர் கூறியது "தயவுசெய்து என்னை லேடி சூப்பர்ஸ்டார் என்று சொல்லாதீர்கள். அதை சொன்னாலே பலர் திட்டுகிறார்கள். 10 பேர் பாராட்டினாலும்.. 50 பேர் திட்ட தான் செய்கிறார்கள். அது எதனால் எ...
மிக்ஜாம் புயல்: சாப்பாடு இல்லாம தவிக்கிறாங்க.. தளபதி விஜய் உருக்கமான பேச்சு
Cinema

மிக்ஜாம் புயல்: சாப்பாடு இல்லாம தவிக்கிறாங்க.. தளபதி விஜய் உருக்கமான பேச்சு

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்படாமல் உள்ளது. பலரும் குடிக்க தண்ணீர், உணவு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு உதவ பலர் முன்வந்தும்.. புயலால் ஏற்பட்ட பாதிப்பு பெரியது என்பதால் இன்னும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் பலர் வீடுகளை இழந்து வீதிகளில் தவிக்கும் அவலநிலை உண்டாகியுள்ளது. பல பொருட்கள் சேதம் ஆகியுள்ளது. மேலும் மின்சாரம், தொலைதொடர்பு, இணையதள வசதி இல்லாமல் பெரும் துயரத்தில் சென்னை மக்கள் சிக்கி உள்ளனர். இந்நிலையில் தளபதி விஜய் பாதிக்கபட்ட மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார். https://youtu.be/jJGCCsB1FCw X தளத்தில் தளபதி விஜய் "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் மு...
பிரிவுக்கு காரணம்.. காதலி ஷீத்தல் பற்றி பப்லு பிரித்விராஜின் பேச்சு
Cinema

பிரிவுக்கு காரணம்.. காதலி ஷீத்தல் பற்றி பப்லு பிரித்விராஜின் பேச்சு

நடிகர் பப்லு பிரித்விராஜ் மனைவி பீனாவை விவாகரத்து செய்துவிட்டு ஷீத்தல் என்ற இளம் பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். ஆனால் சமீப காலமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. ஷீத்தல் பிரித்விராஜை பிரிந்து வாழ்வதை உறுதி செய்யும் விதமாக.. நபர் ஒருவர் ஷீத்தலின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் நீங்கள் பிரித்விராஜை பிரிந்து விட்டீர்களா? என்று கமென்ட்டில் கேட்டுள்ளார். ஷீத்தலும் அந்த கமென்ட்டை லைக் செய்துள்ளார். பலரும் பிரித்விராஜை ஷீத்தலின் கணவர் என்று கமென்ட்டில் குறிப்பிட.. ஷீத்தல் அவர் என் கணவர் இல்லை… எங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்று கடுப்பாகி பதில் அளித்து இருந்தார். இவ்வளவு நடந்தும் பிரித்விராஜ் மௌனம் காத்து வந்தார். இந்நிலையில் பிரித்விராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதை பற்றி பேசியுள்ளார். https://youtu.be/nvLr1XHUZYQ அதில் அவர் க...
“அண்ணன் விஜயகாந்த்..” கலங்கிய நடிகர் சூரியா.. உருக்கமான பேச்சு
Cinema

“அண்ணன் விஜயகாந்த்..” கலங்கிய நடிகர் சூரியா.. உருக்கமான பேச்சு

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நவம்பர் 18 மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். 10 நாட்கள் மேலாகியும் அவர் இன்னும் வீடு திரும்பாதது மக்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவரின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு வதந்திகள் பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மனைவி பிரேமலதா வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் "கேப்டன் மிகவும் நன்றாக இருக்கிறார். வீண் வதந்திகளை நம்பாதீர். பரப்பவும் செய்யாதீர். விரைவில் பூரணமாய் குணமாகி வீடு திரும்புவார்" என்று பிரேமலதா பேசி இருந்தார். மேலும் கேப்டனின் சமீபத்திய புகைப்படங்களையும் பகிர்ந்து நம்பிக்கை அளித்தார். இந்நிலையில் நடிகர் சூரியா கேப்டன் விஜயகாந்த் அவர்களை பற்றி மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். https://youtu.be/TL1oK...
விஜயகாந்த் உடல்நிலை மோசம்? மனைவி பிரேமலதா வீடியோவில் விளக்கம்
Cinema

விஜயகாந்த் உடல்நிலை மோசம்? மனைவி பிரேமலதா வீடியோவில் விளக்கம்

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் தற்போதைய உடல்நிலை குறித்து அறிய மக்கள் பலரும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். நல்லபடியாக அவர் வீடு திரும்ப வேண்டும் என்பதே பலருடைய ஆசை. கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது… அவர்க்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்படுகிறது என்று பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. பலரும் அது உண்மையா பொய்யா என்று அறியாமல் பகிர்ந்து வருகின்றனர். இதுபோன்ற செய்திகள் தேமுதிக தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்த பலரும் அவரை நேரில் காண மருத்துவமனை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேப்டன் மனைவி திருமதி பிரேமலதா மிகவும் மனம்வருந்தி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். https://youtu.b...