நடிகர் பப்லு ப்ரித்விராஜ் கடந்த வருடம் ஷீத்தல் என்கிற 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 56 வயதில் இவருக்கு இரண்டாவது கல்யாணம் அதுவும் 24 வயது பெண் உடன்.. இதெல்லாம் தேவையா என்று பலரும் விமர்சித்து வந்தனர்.

பதிலுக்கு ப்ரித்விராஜ் பேட்டியில் நாங்கள் இன்னும் திருமணம் செய்யவில்லை. ஆனால் காதலித்து வருவது உண்மை தான். முதல் மனைவி பீனாவுடன் விவாகரத்து ஆகிவிட்டது. ஷீத்தலை எனக்கு 1 வருடமாக தெரியும். நட்பு காதலாக மாறிவிட்டது. எங்களுக்கு வயது பிரச்சினை இல்லை.
ஏன் இந்த வயதில் காதல் வரக்கூடாதா? இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று ஆதங்கப்பட்டு பேசியிருந்தார். மேலும் வருகின்ற டிசம்பர் அல்லது அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் எங்கள் திருமணம் நடக்கும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஓர் அதிர்ச்சிகரமான செய்தி சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அது என்னவென்றால் பப்லு ப்ரித்விராஜும் ஷீத்தலும் பிரிந்து விட்டனர் என்பது தான்.

இருவரும் பிரிந்து தனியே தனியே தான் வாழ்கிறார்கள். ஷீத்தல் பெங்களூர் சென்றுவிட்டார் என்றும் தகவல் வருகிறது. ப்ரித்விராஜும் அவருடைய யூடியூப் சேனலில் ஷீத்தல் உடன் இணைந்து வீடியோ போட்டு 1 மாதம் மேலே ஆகிறது. பலரும் இதை எல்லாம் கவனித்து ஷீத்தலின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவில் இதை பற்றி கேட்டு வருகின்றனர்.

நபர் ஒருவர்.. நீங்கள் ப்ரித்விராஜை பிரிந்து விட்டீர்களா? என்று கமென்ட் செய்துள்ளார். அந்த கமென்டை ஷீத்தல் லைக் செய்துள்ளார்.
மற்றொரு நபர் அவரை பிரிஞ்சிட்டீங்கள.. இனி நல்லா வருவ என்று கமென்ட் செய்துள்ளார். அதையும் ஷீத்தல் லைக் செய்துள்ளார்.
இதன் மூலம் மறைமுகமாக ஷீத்தல் காதலன் ப்ரித்விராஜை பிரிந்ததை உறுதி செய்கிறார் என்று பலரும் பேசி வருகிறார்கள்.
இதுகுறித்து ப்ரித்விராஜ் அல்லது ஷீத்தல் நேரடியாக பேசுகிறார்களா என்று பொறுத்து இருந்து பாப்போம்.
