பருத்திவீரன் சர்ச்சை : “அமீர் அண்ணா..” மனம்வருந்திய ஞானவேல்ராஜா
பருத்திவீரன் படத்தால் இயக்குனர் அமீர்க்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாக்கும் இடையே கடுமையான பிரச்சினை போய் கொண்டிருக்கிறது. இருவருமே ஒருவர் மேல் ஒருவர் பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.
ஆனால் ஞானவேல்ராஜா இந்த பிரச்சினை குறித்து சமீபத்திய பேட்டியில் அமீரை பற்றி மிகவும் மோசமாக பேசியிருந்தார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற சிறந்த படங்களை இயக்கியவர் அமீர். அப்படிப்பட்ட ஒரு கலைஞனை இப்படி தரம்தாழ்ந்து விமர்சிப்பது கண்டிக்கதக்கது என சமூக வலைத்தளத்தில் பேசி வந்தனர்.
அமீர்க்காக முதல் ஆளாக நடிகரும் இயக்குனருமான சசிகுமார் ஆதரவாக குரல் கொடுத்தார். இது அப்படியே பூதாகரமாக வெடிக்க.. சசிகுமாரை தொடர்ந்து சமுத்திரக்கனி, பொன்வண்ணன், கரு பழனியப்பன், பாரதிராஜா என பலரும் ஞானவேல்ராஜாவை கண்டிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டு அமீர்க்கு ஆதரவாக பேசி வ...

