லியோவிற்கு 4 மணி காட்சி இல்லையா? சற்றுமுன் வெளிவந்த அதிரவைக்கும் அறிக்கை
லியோ படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. விஜய் ரசிகர்களும் போட்டிப்போட்டு கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர். கண்டிப்பாக லியோ திரைப்படம் முந்தைய படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
தமிழக அரசும் லியோ படத்திற்கு சிறப்புக்காட்சிக்கான அனுமதியை கொடுத்த நிலையில்.. தமிழகத்திலுள்ள திரையரங்குகள் அக்டோபர் 19 முதல் 24 வரையுள்ள இந்த 6 நாட்கள் மட்டும் கூடுதலாக ஒரு காட்சியை சேர்த்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 5 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி.
இந்த செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் லியோ படத்திற்கு அதிகாலை 4 அல்லது 7 மணி காட்சிகள் இருக்குமா என்று கேள்வி எழுப்பி வந்தனர். கேரளா மற்றும் வெளிநாடுகளில் அதிகாலை 4 மணி காட்சியுள்ளதால் தமிழகத்திலும் இருக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்தன...

