லியோ படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். பல தியேட்டர்களில் முதல்நாள் காட்சிகளின் டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்து விட்டன. லியோ படம் பல வசூல் சாதனையை படைக்கும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.

லியோ படம் LCU-வில் வருமா? வராதா? என்ற கேள்வி இன்னும் இந்த படத்தை சுற்றி சுற்றி வருகிறது என்று தான் சொல்லவேண்டும். லோகேஷ் கனகராஜும் பல பேட்டிகளில் LCU பற்றிய கேள்விக்கு அக்டோபர் 19 படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.
ஆனால் ரசிகர்கள் பலருக்கும் லியோ LCU-வில் வரவேண்டும் என்பதே விருப்பம். அப்படி வந்தால் கண்டிப்பாக படம் பெரிய அளவில் பேசப்படும். உறுதியாக 1000 கோடி வசூலை எடுக்கும் என்று ரசிகர்கள் பேசி வருவதை காண முடிகிறது.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லியோ படத்தை பார்த்துவிட்டு படம் LCU-வில் வருகிறதா இல்லையா என்பதை உறுதி செய்துள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால் “தளபதி விஜய்யின் லியோ படம் நன்றாக உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அற்புதமாக எடுத்துள்ளார். அனிருத்தின் இசை மற்றும் அன்பறிவு மாஸ்டர்களின் சண்டைப்பயிற்சி சிறப்பு. LCU. படக்குழுக்கு வாழ்த்துக்கள்” என்று X தளத்தில் பதிவிட்டு லியோ LCU என்பதை உடைத்துவிட்டார்.
லோகேஷ் கனகராஜ் இவ்வளவு நாள் காத்து வந்த LCU ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஒரே பதவில் உலகறிய செய்துவிட்டார். இது ரசிகர்கள் இடையே சிறிய சலசலப்பை ஏற்படுத்தினாலும் பலர் லியோ LCU என்பதை கொண்டாடி வருகின்றனர்.
சிலர் LCU என்பதை கேள்விப்பட்டு கைதி, விக்ரம் படத்தை மீண்டும் பார்க்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் உதயநிதி அவர்கள் LCU வார்த்தைக்கு அடுத்து கண்சிமிட்டும் எமோஜி சேர்த்துள்ளதை கவனித்தீர்களா.. என்று கேள்விக் கேட்டு மீண்டும் குழப்பியுள்ளார்.
நாளை படம் பார்த்தப் பிறகே லியோ LCU-வில் உள்ளதா இல்லையா என்பது தெரியவரும்.. காத்திருந்து பார்ப்போம்.
லோகேஷ் கனகராஜின் செய்தியாளர் சந்திப்பு கீழே உள்ள லிங்க்கில்
