விஜய் ஆண்டனியின் ரத்தம் படம் எப்படி இருக்கு? மக்களின் கருத்து. Raththam Review

இயக்குநர் சிஎஸ் அமுதன் இயக்கி விஜய் ஆண்டனி நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் ரத்தம். அகில உலக சூப்பர்ஸ்டார் சிவாவை வைத்து தமிழ் படம் 1 மற்றும் 2 என காமெடி படங்களை இயக்கிய சிஎஸ் அமுதனின் சீரியஸ் அவதாரம் தான் இந்த ரத்தம் திரைப்படம்.

சீரியல் கில்லர் கதைகள் நம்மூரில் நன்றாக ஓடவே.. சிஎஸ் அமுதனும் அவர் பங்கிற்கு ஒரு படத்தை எடுத்துள்ளார் போல.. இந்த படம் HATE CRIME என்ற புதுவித கொலையை கதைக்களமாக வைத்து செல்கிறது.

விஜய் ஆண்டனி புலனாய்வு பத்திரிக்கையாளராக நடித்துள்ளார். இவருடன் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா இவர்களும் நடித்து உள்ளார்கள்.

எல்லா படத்திலும் வில்லன் வருவார்கள். ஆனால் இந்த படத்தில் வில்லி வந்துள்ளார்.

ரத்தம் படம் இன்று வெளியான நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது. சிலர் படம் ரொம்ப சுமார் என்கிறார்கள். சிலர் படம் ரொம்ப த்ரில்லிங்காக இருக்கிறது என்கிறார்கள்.

மக்களின் ரத்தம் விமர்சனம் கீழே உள்ள லிங்கில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: