பிக்பாஸ்க்கு பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷன்னுகாக ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா சென்று இருந்தார்கள். இந்துஜா தனது நெருங்கிய தோழியான பூர்ணிமாவிடம் சரியாக பேசாமல் விலகி செல்வது போல் தெரிந்தது.

பூர்ணிமாவும் சக போட்டியாளர்களிடம் “நானும் இந்துஜாவும் நெருங்கிய நண்பர்கள். காலேஜ் ஒன்றாக தான் படித்தோம். 9 வருட நட்பு எங்களுடையது. ஆனால் இப்போ அவள் என்னை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது” என்று வருத்தப்பட்டு பேசினார்.
பிக்பாஸ் பார்வையாளர்களும் ஏன் இந்துஜா பூர்ணிமாவை கண்டுகொள்ளவில்லை. பிக்பாஸ்சில் பூர்ணிமாவின் செயல் பிடிக்கவில்லையா? அல்லது இவர்களுக்குள் வேற எதுவும் பிரச்சினையா? என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இந்துஜா சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இந்த சம்பவம் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
அதில் இந்துஜா “பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷன்னுகாக தான் பிக்பாஸ் சென்றோம். எல்லா போட்டியாளர்களையும் சமமாக நடத்த வேண்டும். எந்த ஒரு தனிநபருக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் தர கூடாது போன்ற அறிவுறுத்தல்கள் முன்னரே கொடுக்கப்பட்டது.
பூர்ணிமா நல்லா தான் விளையாடி வருகிறார். காலேஜ்ல அவ தான் எனக்கு நெருங்கிய தோழி. கடந்த 10 வருடத்தில் எப்போதாவது பேசி கொள்வோம். 2 வருடத்திற்கு ஒருமுறை பேசி கொள்வோம்.
நான் அவளுடன் காலேஜில் பழகியதை வைத்து சொல்கிறேன். அவ ரொம்ப நல்ல பொண்ணு.. வலிமையான பொண்ணு.
ஆனால் பிக்பாஸ்சில் அவ சில விஷயங்களை மாற்றி கொண்டு விளையாடினால் ரொம்ப நல்லா விளையாடுவார்” என்று பூர்ணிமாவை கண்டுகொள்ளாததுக்கு காரணத்தை சொல்லி உள்ளார்.