லேடி சூப்பர்ஸ்டார்ன்னு சொல்லாதீங்க.. நயன்தாராவின் வருத்தமான பேச்சு

நயன்தாரா 75 படங்கள் நடித்து 20 வருடம் சினிமா துறையில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். ஒரு நடிகையாக இவ்வளவு வருடம் நிலைத்து நிற்பது சாதாரண விஷயம் அல்ல.. இதனால் ரசிகர்கள் இவருக்கு கொடுத்த பட்டம் தான் லேடி சூப்பர்ஸ்டார்.

ஆரம்பத்தில் இந்த லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. ஆனால் சமீப காலமாக பலரும் நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைப்பதை விமர்சித்து வருகின்றனர். நயன்தாராவின் படங்கள் சரியாக போகாதது இதற்கு காரணமா என்று தெரியவில்லை.

இந்நிலையில் நயன்தாரா சமீபத்திய பேட்டியில் லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தை பற்றி வருத்தப்பட்டு பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியது “தயவுசெய்து என்னை லேடி சூப்பர்ஸ்டார் என்று சொல்லாதீர்கள். அதை சொன்னாலே பலர் திட்டுகிறார்கள்.

10 பேர் பாராட்டினாலும்.. 50 பேர் திட்ட தான் செய்கிறார்கள். அது எதனால் என்று தெரியவில்லை. நான் இன்னும் அந்த இடத்திற்கு போகவில்லையா அல்லது ஒரு பெண்ணாக இருப்பதால் இந்த எதிர்ப்பு வருகிறதா என்று தெரியவில்லை.

ஆனால் லேடி சூப்பர்ஸ்டார் என்று சொன்னாலே ரொம்ப திட்டுகிறார்கள். என்னுடைய பயணம் அந்த சூப்பர்ஸ்டார் பட்டத்தை நோக்கியது அல்ல. சிறந்த படங்களில் நடிப்பது மட்டுமே.

அன்னபூரணி படத்தில் கூட லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் இயக்குனர் என்மீது கொண்ட அன்பால் எனக்கே தெரியாமல் படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தை போட்டுவிட்டார். பலர் என்மீது கொண்ட அன்பால் வந்த பட்டம் தான் இந்த லேடி சூப்பர்ஸ்டார்” என்று மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.

மேலும் நயன்தாரா தனது 20 வருட சினிமா பயணத்தை பற்றியும் எமோஷனலாக பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: