Lal Salaam Teaser : மொய்தீன் பாய் ஆக ரஜினி : மாஸ் வசனங்களுடன் வெளியான லால் சலாம் டீஸர்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணி நடிகர்களாக நடித்துள்ள லால் சலாம் படத்தின் டீஸர் தீபாவளி ஸ்பெஷலாக இன்று வெளியானது.

மதம் மற்றும் விளையாட்டை மையப்படுத்தி 1 நிமிடம் 39 வினாடிகள் அளவு கொண்ட இந்த டீசர், இந்தியா-பாக்கிஸ்தான் மேட்சை டிவில பாத்துருப்பீங்க ரேடியோல கேட்டு இருப்பீங்க… நேர்ல பாத்துருக்கீங்களா என்று உள்ளூர் ஆட்டத்தை பில்ட் அப் செய்து டீஸர் ஆரம்பம் ஆகிறது.

“நடக்குறது வெறும் போட்டியில்ல போர்” என்று இரண்டு மதத்தினருக்கும் ஏற்படும் பிரச்சனைகள்… அதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன என்பதை போட்டுடைக்கும் படமாக லால் சலாம் படம் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்காக மொய்தீன் பாய் ஆக ரஜினி களமிறங்குகிறார்.. டீசரில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் ரஜினி ரசிகர்களுக்கு மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க :

“விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க , குழந்தைங்க மனசுல கூட விஷத்தை விதைச்சுருக்கீங்க” என்று வரும் ரஜினியின் வசனம் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.

ஒளிப்பதிவு மற்றும் இசை :

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான இந்த லால் சலாம் படத்தின் டீசரில் விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு, ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசை கூடுதல் பலத்தை சேர்த்திருக்குக்கிறது.

கேமியோ ரோல் :

தற்போது வெளி ஆகும் நிறைய படங்களில் கேமியோ ரோல் என்பது ஒரு ஃபேஷன் ஆக மாறியுள்ளது.. அந்த வகையில் பல வருடங்களுக்கு பிறகு மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் வெளியாக உள்ள லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் ரிலீஸ் :

2024 பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ள இந்த படம்ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .. இந்த படம் தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் வெளியாக உள்ளது.. பொங்கல் ரேஸில் அயலான், கேப்டன் மில்லர் படங்களை தொடர்ந்து லால் சலாம் படமும் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைவர் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக லால் சலாம் படம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தீபாவளி ஸ்பெஷல் ஆக வெளியான லால் சலாம் படத்தின் டீசர் கீழே உள்ள லிங்கில்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: