மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து கோலிவுட்டின் நம்பர் 1 இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் லோகேஷ் பற்றி சமூக வலைத்தளத்தில் ஒரு சர்ச்சை பரவி வருகிறது.

லோகேஷ் கனகராஜின் ஃபேஸ்புக் பக்கத்தில் வைரல் யோகா என்ற பெயரில் பெண்களின் சற்று ஆபாசமான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோக்களை பார்த்த பலரும் என்ன இதுப்போன்ற வீடியோக்களை லோகேஷ் பகிர்ந்து வருகிறார் என்று அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
பிறகு தான் லோகேஷ் கனகராஜ் பெயரில் இயங்கி வரும் அந்த ஃபேஸ்புக் பக்கம் HACK செய்யப்பட்டு உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தை பற்றி லோகேஷ் கனகராஜ் X தளத்தில் “நான் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என இந்த இரண்டு சமூக வலைத்தளத்தில் மட்டுமே உள்ளேன். வேற எந்த ஒரு சமூக வலைத்தள பக்கங்கள் எனக்கு இல்லை. என் பெயரில் இருக்கும் போலி ஐடிகளை தவிருங்கள் பின்தொடராதீர்கள்” என்று தன் பெயரில் இயங்கி வரும் ஃபேஸ்புக் பக்கம் போலி என்று கூறியுள்ளார்.
பொதுவாக ஹேக்கர்ஸ் இப்படி பிரபலங்களை குறி வைப்பது வழக்கம் தான். இவ்வாறு ஹேக் செய்யப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. விரைவில் இதற்கு ஒரு தீர்வை கொண்டு வரவேண்டும் என்பதே பலரின் கருத்து.

லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் 171 படத்தை இயக்க தயார் ஆகி வருகிறார். விரைவில் அதன் அப்டேட் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.