பிக் பாஸ் 8 : சாச்சனாவை காப்பாற்ற நடந்த சதி? விஜய் சேதுபதியை தாக்கிய சிவகுமார் மனைவி சுஜா வருணி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் சிவகுமார் 28 நாட்கள் இருந்த நிலையில் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

ஆனால் சிவகுமாரை வெளியேற்றியது சரி இல்லை என்று சிவக்குமாரின் மனைவி நடிகை சுஜா வருணி தன் கருத்தை சமூக வலைதளத்தில் கூறி வருகிறார். இதற்கு பலரும் பல வித கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தாரக மந்திரம். அதுபோலத்தான் சில வாரங்களில் எதிர்பாராத பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

சாச்சனா கடந்த வாரத்தில் வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் தான் இருந்தார். ஆனால் சிவகுமார் வெளியேற்றப்பட்டது சரியானது இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதை சிவகுமாரின் மனைவி சுஜாவருணியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்.

அந்த பதிவில் “6வது இடத்தில் இருந்த சிவகுமார் வெளியேறி இருக்கிறார். ஆனா கடைசி இடத்தில் இருந்த சாச்சனா வெளியேற்ற படவில்லை என்றும்
தொகுப்பாளர் ‘’ விஜய் சேதுபதி அப்பா நா இருக்கேன் மா உனக்கு’’ னு சொல்ற விதமா அந்த பதிவில் போடப்பட்டு இருக்கிறது. இந்த மீம் போஸ்ட்டை சுஜா வருணி ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டிருந்தாலும் நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்களிலேயே 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் அறிமுகம் ஆனார்கள். ஆனால் தற்போது மூன்று வாரங்களாக தொடர்ந்து அடுத்தடுத்து வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பாலான ரசிகர்கள் விஜய் சேதுபதி தன்னுடைய மகளாக நடித்த சாச்சனாவைக் காப்பாற்றுவதற்காக சிவகுமாரை வெளியேற்றம் செய்து விட்டார் என்று கூறி வருகிறார்கள்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு வாரங்களிலேயே விஜய் சேதுபதி மீது அதிகமான எதிர்மறை விமர்சனங்கள் தொடங்கிவிட்டது.

நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தவர்களை அவர்களுடைய தரப்பு நியாயத்தை சொல்ல விடாமல் விஜய் சேதுபதி பேசுகிறார் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

இதற்கு பதில் சொல்லும் வகையில் கடந்த எபிசோடில் பார்வையாளர்களில் இருந்த ஒரு பெண் விஜய் சேதுபதியை பாராட்டி இருந்தார். அப்போது அவர் பேசும்போது வெளியே விஜய் சேதுபதி போட்டியாளர்களை பேசவிடாமல் செய்கிறார் என்று சொல்லுறாங்க.. ஆனா உள்ளே வந்து பார்க்கும்போது தான் நீங்க படுற கஷ்டம் தெரிகிறது என்று சொல்லியிருந்தார்.

அதுபோல நீங்க சாச்சனாவுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுவீங்கன்னு சொல்லுறாங்க ஆனால் நிஜத்தில் அப்படியெல்லாம் இல்லவே இல்லையே என்று அந்தப் பெண் சொல்ல, அதற்கு விஜய் சேதுபதி நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோ லிங்க்கை கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: