ஓய்வை அறிவித்த சூப்பர் ஹிட் பட ஹீரோ : இது தான் உண்மை காரணமா ?
தொலைக்காட்சி தொடர்களில் தனது பயணத்தை தொடங்கி சினிமாவில் பல துறைகளில் சாதனை படைத்தவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் இந்தி சீரியல்கள் மூலம் தன் பயணத்தை துவங்கியவர் விக்ராந்த் மாஸி.
கடந்த 2013ம் ஆண்டில் இருந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும் 2023ம் ஆண்டு வெளியான 12வது ஃபெயில்(12th fail) படம் விக்ராந்த் மாஸிக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. அதன் பிறகு அனைவராலும் கவனிக்கப்படும் நடிகரானார் விக்ராந்த் மாஸி.
12வது ஃபெயில்(12th fail)படம் ஓடிடி தளத்தில் வெளியாகி அப்படம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. 2013ல் வெளிவந்த 'லூடேரா' படத்தில் அறிமுகமாகி கடந்த 14 வருடங்களாக நடித்து வருகிறார் .
விக்ராந்த் மாஸி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான செக்டர் 36, தி சபர்மதி ரிப்போர்ட் ஆகிய படங்களும் வெற்றி பெற்றன. இதிலும் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ திரைப்படத்திற்கு சில மாநிலங்கள் வரி விலக்கு அ...