நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகவும், கவனிக்கத் தகுந்தவராக உள்ளார். நடிகராக மட்டும் இல்லாமல், பாடலாசிரியராக, பாடகராக, தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

கடைசியாக அவரது நடிப்பில் வெளியான அமரன் படம் நிஜ கதையை மையப்படுத்தி சினிமாவிற்காக எதையும் புகுத்தாமல் அழகாக உருவாகியிருக்கும் இப்படம் ரிலீஸ் ஆன நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
ரிலீஸ் ஆகி 26 நாள் முடிவில் இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 158 கோடி வரை வசூல் செய்துள்ளது . வரும் நாட்களிலும் கண்டிப்பாக படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
சிவகார்த்திகேயனின் அமரன் படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது.

இந்த நிலையில் தெலுங்கில் அமரன் படம் விஜய்யின் லியோ பட சாதனையை முறியடித்துள்ளது. அமரன் படம் ரூ.45 கோடி வரை வசூல் செய்து ரூ.44 கோடி வரை வசூல் செய்திருந்த விஜய்யின் லியோவை முந்தியுள்ளது.
இதனை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சிவகார்த்திகேயனின் 25வது படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவருவதை சமூக வலைதளங்களில் நம்மால் காண முடிகிறது.
அந்த வகையில், தற்போது சிவகார்த்திகேயனின் 25 பட செய்தி வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்க போகும் அவரது 25வது படம் சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் எடுக்கவுள்ளதாகவும் , இந்த தொகை வெறும் படப்பிடிப்பிற்காக மட்டுமே நடிகர், இயக்குனர் மற்றும் நடிகையின் சம்பளம் இந்த பட்ஜெட்டில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி , ஸ்ரீலீலா ,அதர்வா நடிக்கிறார்கள். அதனை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் தான் இசை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. இந்த திரைப்படம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டது என கூறப்படுகிறது.
மேலும் சிவகார்த்திகேயன் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி மற்றும் வெங்கட் பிரபுவின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.