இயக்குனர் நெல்சனின் கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு காமெடியனாக அறிமுகம் ஆனவர் தான் ரெடின் கிங்ஸ்லி. அதன் பிறகு பல படங்களில் காமெடியனாக நடித்து முன்னனி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி நடிகை சங்கீதாவை திருமணம் செய்துள்ளார்.
டான்சர் சதீஷ் X தளத்தில் ரெடின் கிங்ஸ்லி, சங்கீதாவின் திருமண புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அதில் ” திருமண நல்வாழ்த்துகள் ரெடின் கிங்ஸ்லி. உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையட்டும். இது உண்மை திருமணம் தான்.. படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல” என்று சதீஷ் கூறியுள்ளார்.
சங்கீதா தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு சிறிய தோற்றத்தில் நடித்தது மூலம் பிரபலமானவர். பிறகு பல படங்களில் சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். சினிமா மட்டுமில்லாமல் சன் டிவி திருமகள் சீரியலில் சுலோச்சனா என்ற கதாபாத்தித்தில் நடித்து வருகிறார்.
ரெடின் மற்றும் சங்கீதாவின் திருமணம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இது எதோ படத்தின் ப்ரோமோஷன் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.

ஆனால் டான்சர் சதீஷ்.. ரெடின் கிங்ஸ்லியின் மிகவும் நெருங்கிய நண்பர். இவர்கள் இருவரும் பீஸ்ட் படத்தில் ஒன்றாக நடித்துள்ளார்கள். அவரே நிஜ திருமணம் என்று சொல்லும்போது இந்த திருமணம் உண்மையாக தான் இருக்கும் என்றும் சமூக வலைத்தளத்தில் பேசி வருகிறார்கள்.
ரெடின் கிங்ஸ்லி அல்லது சங்கீதாவே இந்த திருமணத்தை பற்றி பேசினால் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். பொறுத்து இருந்து பாப்போம்.