லியோ பாடாய்ப்படுத்தும் இரண்டாம் பாதி.. முழு விமர்சனம்
தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இன்று வெளியாகியிருக்கும் படம் தான் லியோ. விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் சினிமா விரும்பிகளும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த லியோ படம் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம் வாருங்கள்.
காஷ்மீரில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் பார்த்திபன் வாழ்க்கையை ஒரு சம்பவம் திருப்பி போடுகிறது. பார்த்திபன் தான் லியோ தாஸ் என்று பழித்தீர்க்க ஆண்டனி தாஸ் மற்றும் ஹரோல்டு தாஸ் துடிக்கிறார்கள். பார்த்திபன் தான் லியோ தாஸா? பார்த்திபன் குடும்பத்துக்கு என்ன ஆனது? ஆண்டனி தாஸ் மற்றும் ஹரோல்டு தாஸ் என்ன ஆனார்கள்? என்பதே மீதி கதை
மொத்த லியோ படத்தை விஜய் மட்டுமே தன் தோளில் சுமக்கிறார். மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படம் A History Of Violence என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்பதை படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்கள். லியோ ப...